அப்பா மரணமடைந்தது எதனால்?... உண்மையான காரணத்துடன் அனிதாவின் உருக்கமான பதிவு...!

First Published Dec 29, 2020, 4:23 PM IST

இந்நிலையில் தனது தந்தையின் மரணம் குறித்து சோசியல் மீடியாவில் அனிதா சம்பத் உருக்கமான பதிவை பகிர்ந்துள்ளார்.

பிரபல தனியார் தொலைக்காட்சியின் செய்திவாசிப்பாளரான அனிதா சம்பத் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

84 நாட்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் பல சண்டை, சச்சரவுகள், சோகங்களை கடந்து வந்த அனிதா கடந்த வாரம் அந்த நிகழ்ச்சியிலிருந்து வெளியேறப்பட்டார். வெளியே வரும் போது கூட இந்த ஆண்டு நியூ இயரை மகிழ்ச்சியாக கொண்டாட வேண்டும் என உற்சாக கூறிவிட்டு தான் வீட்டிற்கு வந்தார்.

ஆனால் அனிதா வீட்டிற்குள் வந்த சில நாட்களிலே இப்படியொரு செய்தி வரும் என யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். அனிதா சம்பத்தின் தந்தையும் பத்திரிகையாளரும், எழுத்தாளருமான ஆர்.சி.சம்பத் இன்று மரணமடைந்தார் (62) என்ற செய்தியைக் கேட்டு ரசிகர்கள் துக்கத்தில் ஆழ்ந்தனர்.

தனது மகனுடன் சீரடி சென்ற ஆர்.சி.சம்பத் சென்னை திரும்பும் வழியில் ரயிலில் மரணமடைந்தார். அவரது உடல் பெங்களூரு ரயில் நிலையத்தில் இருந்து ஆம்புலன்சில் சென்னை எடுத்து வரப்படுகிறது. இந்த திடீர் மரணம் அனிதா சம்பத்தின் குடும்பத்தினர் மத்தியில் பேரதிர்ச்சியையும், பெரும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் தனது தந்தையின் மரணம் குறித்து சோசியல் மீடியாவில் அனிதா சம்பத் உருக்கமான பதிவை பகிர்ந்துள்ளார். அதில், எனது அப்பா ஆர்.சி.சம்பத் வயது முதிர்வு காரணமாக திடீரென மரணமடைந்தார். அவருக்கு அல்சர் பாதிப்பு இருந்தது. அவர் இப்போது இல்லை என்பதை என்னால் நம்ப முடியவில்லை.

இறுதியாக அவரை பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தனிமைப்படுத்திக் கொள்ளும் முன்பு பார்த்தேன். நான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வந்த போது அவர் சீரடி சென்றிருந்தார். அதன் பின்னர் அவருடைய குரலைக் கூட நான் கேட்கவில்லை. காரணம் அவரது போன் சிக்னல் இல்லாததால் தொடர்பு கொள்ள முடியவில்லை.

இன்று காலை 8 மணிக்கு இறந்துவிட்டார் என்ற அதிர்ச்சியான செய்தியை அறிந்தேன். அப்பா சீரடியில் இருந்து ரயிலில் ஆந்திரா அருகே வந்துகொண்டிருந்தார். அவர் நாளை சென்னை வந்திருக்க வேண்டியது. நான் அவர் உயிரோடு வர வேண்டும் என நினைக்கிறேன். என்னால் நம்பமுடியவில்லை. டாடி நீ வீட்டுக்கு நடந்து வரணும். உன்கிட்ட நெறைய பேசணும். உன்னுடைய குரல் கேட்டு நூறு நாள் ஆச்சு.

தெரிஞ்சிருந்தா முன்னாடியே பிக்பாஸில் இருந்து வெளியேற்றப்பட்டு முன்னாடியே அப்பா கூட கொஞ்ச நாள் இருந்திருப்பேன். விஜய் டிவி நிகழ்ச்சி திரும்ப வரும். என் அப்பா இனி திரும்ப வரமாட்டாரு. இந்த வாரம் நான் நிகழ்ச்சியில் காப்பாற்றப்பட்டிருந்தால் கடைசியாகக் கூட அப்பாவ பாத்திருக்க முடியாது. வாழ்க்கை கணிக்க முடியாதது.எல்லாம் ஒரு காரணத்திற்காக நடக்கிறது. உங்களுடைய பெற்றோரை கவனித்துக் கொள்ளுங்கள். நான் அவரை மிஸ் செய்கிறேன் என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

Today's Poll

எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?