- Home
- Cinema
- Bharathi Kannamma Roshini: அட பாவமே... இரண்டு சூப்பர் டூப்பர் ஹிட் பட வாய்ப்புகளை இழந்த பாரதி கண்ணம்மா ரோஷ்னி!
Bharathi Kannamma Roshini: அட பாவமே... இரண்டு சூப்பர் டூப்பர் ஹிட் பட வாய்ப்புகளை இழந்த பாரதி கண்ணம்மா ரோஷ்னி!
பாரதி கண்ணம்மா (Bharathi Kannnama) சீரியலால் இரண்டு சூப்பர் டூப்பர் ஹிட் பட வாய்ப்புகளை இழந்துள்ளாராம் அதில் ஹீரோயினாக நடித்து வந்த ரோஷ்னி (Roshini). அந்த படங்கள் என்னென்ன என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

விஜய் டிவியின் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியலுக்கு, ஆரம்பத்தில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
இந்த சீரியலின் டிஆர்பிக்கு முக்கிய காரணம், கண்ணம்மா சீரியலில் நடித்து வந்த டார்க் ஸ்கின் அழகி, ரோஷ்னி தான். அப்பாவியாக நடித்த போதும் சரி, ஒரு குழந்தைக்கு அம்மாவாக தைரியமான கதாபாத்திரத்தில் நடித்த போதும் சரி, மிகவும் நேர்த்தியாக தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தி வந்தார்.
இந்த சீரியலில் இருந்து கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடித்து வந்த ரோஷினி பட வாய்ப்புகள் குவிந்து வந்ததால் திடீர் என சீரியலை விட்டு விலகியதால், டிஆர்பி மளமளவென சரிய துவங்கியது.
மேலும் புது கண்ணம்மாவாக வினுஷா என்பவர் நடித்து வருகிறார். இவரும் பார்ப்பதற்கு ஒரு ஜாடையில் ரோஷ்னி மாதிரியை இருந்தாலும், திறமையான நடிப்பை வெளிப்படுத்தி வந்தாலும், இன்னும் சீரியல் பழைய டி.ஆர்.பி ரேட்டிங்கை பிடிக்க போராடி வருகிறது.
இந்நிலையில் இந்த சீரியலில் இருந்து ரோஷ்னி விலகியதற்கு முக்கிய காரணமாக கூறப்பட்டது, பல படவாய்ப்புகளை இழந்தது தான் என்றும், எனவே இனி சீரியலில் இருந்து விலகி திரைப்படங்களில் கவனம் செலுத்த உள்ளதாக கூறப்பட்டது.
அதே நேரம் சீரியலில் இருந்து விலகியதற்காக ரோஷ்னி, தன்னுடைய ரசிகர்களிடமும் மன்னிப்பு கேட்டிருந்தார். இது ஒரு புறம் இருக்க, 'பாரதி கண்ணம்மா' சீரியலில் தொடர்ந்து நடித்து வந்ததால் இரண்டு சூப்பர் ஹிட் பட வாய்ப்புகளை ரோஷ்னி இழந்துள்ளார். இதுகுறித்த தகவல் தற்போது வெளியாகி பலரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.
இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் இந்த ஆண்டு ஓடிடி தளத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற 'சார்பட்டா பரம்பரை' படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக நடித்த மாரியம்மா கதாபாத்திரத்தில் நடிக்க இவருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. சீரியலில் கவனம் செலுத்தி வந்ததால் இந்த வாய்ப்பை ரோஷ்னி ஏற்கவில்லை.
அதே போல்... சூர்யா தயாரித்து, நடித்த... 'ஜெய்பீம்' படத்தில் செங்கேணி கதாபாத்திரத்தில் நடிக்க ரோஷ்னிக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆனால் அதையும் சீரியலில் நடித்து வந்ததால் ஏற்க முடியவில்லை. மேலும் தொடர்ந்து பல படங்களில் வாய்ப்புகளை சீரியலால் இழக்க நேரிடும் என்பதாலேயே.. ஒரு கட்டத்தில் இந்த சீரியலில் இருந்து விலகி உள்ளார் ரோஷ்னி.
இரண்டு சூப்பர் டூப்பர் பட வாய்ப்புகளை இழந்தது, மிகவும் வேதனையான விஷயம் என்றாலும்... அடுத்தடுத்து தரமான கதைகளை தேர்வு செய்து வெள்ளித்திரையில் நிலையான இடத்தை ரோஷ்னி பிடிப்பாரா? என்பதையும் பொறுத்திருந்து பார்ப்போம்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.