MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • சூர்யா உடன் ஜோடி சேரும் பாக்கியஸ்ரீ போர்ஸ் - இயக்கப்போவது யார் தெரியுமா?

சூர்யா உடன் ஜோடி சேரும் பாக்கியஸ்ரீ போர்ஸ் - இயக்கப்போவது யார் தெரியுமா?

நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக தெலுங்கு ஹீரோயின் பாக்கியஸ்ரீ போர்ஸ் நடிக்க உள்ளார். அது எந்த படம் என்பதை பற்றி பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Feb 18 2025, 03:29 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
ரெட்ரோ நாயகன் சூர்யா

ரெட்ரோ நாயகன் சூர்யா

கங்குவா படத்தின் தோல்விக்கு பின் கதைத்தேர்வில் கவனம் செலுத்திவரும் சூர்யா, வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்த வகையில் அவர் நடிப்பில் தற்போது ரெட்ரோ திரைப்படம் உருவாகி உள்ளது. இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கி உள்ளார். இப்படத்தை சூர்யாவின் 2டி நிறுவனம் தான் தயாரித்து உள்ளது. இப்படம் வருகிற மே மாதம் 1ந் தேதி உழைப்பாளர் தினத்தன்று ரிலீஸ் ஆக உள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
24
ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா

ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா

ரெட்ரோ படத்தை தொடர்ந்து சூர்யாவின் 45வது படத்தை ஆர்.ஜே.பாலாஜி இயக்கி வருகிறார். இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார். இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் இப்படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தில் ஆர்.ஜே.பாலாஜியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இதையும் படியுங்கள்... Suriya Plan: சூர்யாவின் புது பிளான்! அகரம் பவுண்டேஷன் மூலம் இனி பொதுமக்களும் பயன்பெறலாம்!

34
சூர்யாவுடன் ஜோடி சேரும் பாக்கியஸ்ரீ போர்ஸ்

சூர்யாவுடன் ஜோடி சேரும் பாக்கியஸ்ரீ போர்ஸ்

இதையடுத்து சூர்யா நடிக்க உள்ள புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக பாக்கியஸ்ரீ போர்ஸ் நடிக்க உள்ளார். இவர் தான் தற்போது தெலுங்கு திரையுலகில் டிரெண்டிங் ஹீரோயினாக வலம் வருகிறார். இப்படம் மூலம் தமிழ் சினிமாவில் எண்ட்ரி கொடுக்க உள்ளார் பாக்கியஸ்ரீ போர்ஸ். இப்படத்தின் பணிகள் விரைவில் தொடங்க உள்ளன. இதில் மாருதி காரை பற்றிய கதையாகும். இப்படம் பான் இந்தியா அளவில் உருவாக உள்ளதாக கூறப்படுகிறது.

44
இயக்குனர் யார்?

இயக்குனர் யார்?

சூர்யா - பாக்கியஸ்ரீ போர்ஸ் ஜோடியாக நடிக்க உள்ள படத்தை வெங்கி அட்லூரி இயக்க உள்ளார். தெலுங்கு திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் இவர் அண்மையில் லக்கி பாஸ்கர் என்கிற சூப்பர் டூப்பர் ஹிட் படத்தை கொடுத்திருந்தார். இதுதவிர தமிழில் நடிகர் தனுஷ் நடித்த வாத்தி படத்தை இயக்கியதும் வெங்கி அட்லூரி தான். அவர் முதன்முறையாக நடிகர் சூர்யா உடன் கூட்டணி அமைக்க உள்ளதால் அப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது.

இதையும் படியுங்கள்... அகரம் பவுண்டேஷன் புதிய அலுவலக திறப்பு விழா! இது என்னுடைய வருமானத்தில் கட்டியது! சூர்யா நெகிழ்ச்சி!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
சூர்யா

Latest Videos
Recommended Stories
Recommended image1
Savitri: இறப்பதற்கு முன் நடிகையர் திலகம் சாவித்திரி கூறிய கடைசி வார்த்தைகள்.! கண்ணீர் வரவைக்கும் இறுதி நிமிடங்கள்.!
Recommended image2
Ethirneechal Thodargiradhu : ஈஸ்வரியை கேள்விகளால் மடக்கிய நீதிபதி, ஓங்கும் ஜனனியின் கை.! எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் அப்டேட்.!
Recommended image3
Vijay Movie : சன் டிவியில் மீண்டும் ஒளிபரப்பாகும் விஜய் படம்.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.. எந்த படம்.?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved