MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
TRENDING :
Moon Transit in Scorpio
OTT Release This Week
DA Hike
Venus Retrograde
Train Lower Berth
Mercury Transit
8th Pay Commission
Chanakya Niti
Tamil Nadu Power Cut
FD Vs RD Calculator
Single Door Fridge Tips
Upcoming Hatchback Cars
Bigg Boss Tamil Season 10
  • Home
  • Cinema
  • இந்த வருடத்தில் வெற்றி வாகை சூடிய முன்னணி நாயகர்களின் படங்கள் குறித்த தொகுப்பு!

இந்த வருடத்தில் வெற்றி வாகை சூடிய முன்னணி நாயகர்களின் படங்கள் குறித்த தொகுப்பு!

இந்த வருடத்தில் வெளியாகி வெற்றியும், தோல்வியும் சந்தித்த முன்னணி நடிகர்களின் படங்கள் குறித்த  தொகுப்பை பார்க்கலாம்.

3 Min read
Author : Kanmani P
| Updated : Jul 08 2022, 04:47 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19

ராதே ஷ்யாம் :

பாகுபலி நாயகன் பிரபாஸ், பூஜா ஹெக்டே நடிப்பில் கடந்த மார்ச் 11-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. காதல் நாடகமான இந்த படம் ரூ 350 கோடியை பட்ஜெட்டாக கொண்டிருந்தது. பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்ட இந்த படம் ரசிகர்கள் மத்தியில் போதுமான வரவேற்பு பெறாமல் தோல்வியை சந்தித்தது. பட்ஜெட்டின் மதிப்பை விட மிகக் குறைந்த அளவே வருமானத்தை பெற்றிருந்தது. ராதே ஷ்யாம்  ரூ.150 முதல் 214 கோடி வரை வசூல் செய்துள்ளதாக பட குழு அறிவித்தது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
29
RRR

RRR

ஆர் ஆர் ஆர் :

மார்ச் மாதத்தில் வெளியான ஆர் ஆர் ஆர் மாஸ் காட்டியது. பாகுபலி இயக்குனர் ராஜமவுலியின் அடுத்த பிரமாண்டமாக உருவான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. உலகளவில் நல்ல பாக்ஸ் ஆஃபீஸ் கலெக்சனை பெற்ற இந்த படம் சுமார். ரூ. 1200 கோடியை வசூலித்தது. இதன் பட்ஜெட் ரூ.550 கோடி.

மேலும் செய்திகளுக்கு...ஸ்மைலிங் குயின் சாய்பல்லவி..கன்னம் சிவக்க..விதவிதமான போஸ்!

39
kgf 2

kgf 2

கே ஜி எப் 2:
யாஷ் நடிப்பில் வெளியாகி அதிரிபுதிரி வெற்றியை பெற்ற படம் தான் கேஜிஎப் 2. முந்தைய பாகம் கேஜிஎப் 2  குறித்த எதிர்பார்ப்பு எகிறி இருந்தது. கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி வெளியான இந்த படம் உலகம் முழுவதும் மாபெரும் சாதனையை படைத்தது. ரூ.1.250 கோடிகளை வசூல் சாதனையாக பெற்ற இந்த படத்தின் பட்ஜெட் வெறும் 100 கோடி மட்டுமே 

49
maaran

maaran

மாறன் :

தனுஷ் நடிப்பில் கடந்த மார்ச் 11ஆம் தேதி வெளியான மாறன் படம். போதுமான வரவேற்பை பெறவில்லை. கார்த்திக் நரேன் என்பவர் இயக்கி இருந்த இந்த படத்தை சத்யஜோதி பிலிம் சார்பில் டிஜி தியாகராஜன் தயாரித்திருந்தார். இதில் மாளவிகா  ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர் ஜி வி பிரகாஷ் இசையமைத்திருந்தார். டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியான இந்த படத்தில் தனுஷ் பத்திரிகையாளராக நடித்திருந்தார். இது எதிர்மறையான விமர்சனங்களை மட்டுமே பெற்றுள்ளது.

மேலும் செய்திகளுக்கு...Actor Vikram hospitalised : உடல் நலக்குறைவு காரணமாக நடிகர் விக்ரம் மருத்துவமனையில் அனுமதி!

59

ஹெச் வினோத்துடன் இரண்டாவது முறையாக இணைந்த அஜித்குமார் நடிப்பில் வெளியான படம் வலிமை. இந்த ஆண்டு துவக்கத்தில் வெளியான இந்த  படத்தில் அஜித்  போலீஸாக நடித்திருந்தார்.  போனி கபூர் தான்இந்த படத்தையும் தயாரித்து இருந்தார்., 150 கோடி பட்ஜட்டில் தயாரான இந்தப் படம் 234 கோடிகளை வசூலாக பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இருந்தபோதிலும் விமர்சன ரீதியில்  இந்த படம் போதிய வரவேற்பு பெறவில்லை என்று தெரிகிறது.

69
Image: Official film poster

Image: Official film poster

நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான பீஸ்ட் படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்ற போதிலும் சரியான லாஜிக் இல்லை எனக் கூறி விமர்சகர் படத்திற்கு போதுமான ஸ்டார்களை கொடுக்கவில்லை என்று கூற வேண்டும். இந்த படத்தில் விஜய் ராணுவ வீரராக நடித்திருப்பார். ஒரு மாலில் மாட்டிக் கொண்ட மக்களை எவ்வாறு நாயகன் காப்பாற்றுகிறார் என்பதை இந்த படத்தின் மையக்கருவாகும் ரூ.150 கோடியில் தயாரான இந்த படம் ரூ.250 கோடிகளை வசூல் செய்திருந்த போதிலும் எதிர்மறை விமர்சனங்களை பெற்றது.

79
KaathuvaakulaRenduKaadhal

KaathuvaakulaRenduKaadhal

காத்து வாக்குல ரெண்டு காதல்

விஜய் சேதுபதி நயன்தாரா சமந்தா என மூவரின் நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான காத்து வாக்குல ரெண்டு காதல் படம் கடந்த ஏப்ரல் 28ஆம் தேதி வெளியானது. நகைச்சுவை கலந்த காதல் கதைக்களத்தை கொண்ட இந்த படம்  ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. நயன்தாரா விக்னேஷ் சிவனின் தயாரிப்பு நிறுவனமான ரவுடி பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான இந்த படம் 70 கோடிகளை வசூல் செய்திருந்தது.

மேலும் செய்திகளுக்கு...இன்று திரையரங்குகளில் யோகி பாபுவின் பன்னிக்குட்டி! முன்னதாக வெளியான அப்டேட்டுகள்!

89
don

don

டான் :

அறிமுக இயக்குனரான சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நாயகனாக நடித்த டான் படம் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை சிவகார்த்திகேயனின் எஸ் கே ஸ்டுடியோஸ் தான் தயாரித்திருந்தது. இந்த படம் 38 கோடி பட்ஜெட்டில் உருவாகி 106 கோடியை வசூல் சாதனையாக பெற்றது.

99
vikram

vikram

விக்ரம் :

கமலின் நடிப்பில் சமீபத்தில் வெளியான விக்ரம் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான இந்த படம் பான் இந்தியா மூவியாக வெளியாகியது. 150 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படம் இதுவரை  442 கோடியை வசூல் செய்துள்ளது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanmani P
நடிகர் விக்ரம்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Bigg Boss வீட்டில் மீண்டும் வெடித்த மோதல்... லீடர் ஷமாவுடன் சண்டையில் இறங்கிய அவினாஷ்
Recommended image2
பிக் பாஸில் சர்ச்சை பேச்சு... விஜய் சேதுபதியை வறுத்தெடுத்த விர்சுவல் வாரியர்ஸ் - விஜய் டிவி கொடுத்த திடீர் விளக்கம்
Recommended image3
Jason Sanjay-Vijay-Trisha : அடுத்தடுத்த நாளில் ரிலீசாகும் ஜேசன் சஞ்சய்-விஜய்-திரிஷா படங்கள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved