Beep song case : பீப் பாடல் விவகாரம் - ஜஸ்ட் மிஸ்ஸில் எஸ்கேப்பான சிம்பு..
Beep song case : பீப் பாடல் விவகாரத்தில் நடிகர் சிம்புவுக்கு எதிராக கோவை போலீசார் பதிவு செய்த வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது..

simbu
தமிழ் சினிமாவில் ஆடல், பாடல், நடிப்பு என பல்வேறு திறமைகள்ளோடு விளங்குபவர் நடிகர் சிம்பு. இவர் அவ்வப்போது ஏதேனும் சர்ச்சையில் சிக்கிக் கொள்வது வழக்கம் தான்.
simbu
கடந்த ஆறு வருடத்திற்கு முன் நடிகர் சிம்பு பாடி, அனிருத் இசையமைத்த 'பீப்' பாடல் ஒன்று சமூகவளைதலத்தில் வெளியாகி மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.
simbu
இந்த பாடலுக்கு பிரபல இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்ததாக கூறப்படுகிறது. இந்த பாடல் வரிகளில் பெண்களை கொச்சைப்படுத்தும் விதமான பல வார்த்தைகள் இடம்பெற்றிருந்தது.
simbu
இதையடுத்து நடிகர் சிம்புக்கு எதிராக போராட்டங்கள் நடந்தன. சிம்பு, அனிருத் மீது பெண்கள் அமைப்பு கொடுத்த புகாரின் அடிப்படையில் கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
simbu
இதையடுத்து ஐகோர்ட்டில் சிம்பு மனு தாக்கல் செய்தார். அதில், கோவை போலீசார் பதிவு செய்த வழக்கையும், அந்த வழக்கு விசாரணைக்காக தன்னை நேரில் ஆஜராகவேண்டும் என்று அனுப்பிய சம்மனையும் ரத்து செய்யவேண்டும்’ என்று கூறியிருந்தார்.
simbu
அப்போது, மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல் தியாகேஸ்வரன், ‘ஒரு சம்பவத்துக்கு பல வழக்குகள் பதிவு செய்ய முடியாது. ஆனால் தமிழகம் முழுவதும் பல போலீஸ் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. நேற்றுக்கூட முன்ஜாமீன் மனு மீதான உத்தரவில், கோவை வழக்கிற்கு சென்னையிலேயே ஆஜராகலாம் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது’ என்று வாதிட்டார்.
simbu
அப்போது நீதிபதி, ‘மனுதாரர் மீது பதிவு செய்யப்பட்ட முதல் வழக்கு இதுதானே’ என்று கேள்வி எழுப்பினார். அதற்கு இருதரப்பு வக்கீலும் ‘ஆமாம்’ என்று கூறினார்கள். இதையடுத்து, இந்த மனு மீதான விசாரணையை தள்ளிவைக்கிறேன். அதற்குள் கோவை மாவட்ட போலீசார், இந்த மனுவுக்கு பதில் மனு தாக்கல் செய்யவேண்டும்’ என்று நீதிபதி உத்தரவிட்டார்
simbu
இந்நிலையில் பீப் பாடல் விவகாரத்தில் நடிகர் சிம்புவுக்கு எதிராக கோவை போலீசார் பதிவு செய்த வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது..