ரஜினியின் அண்ணாத்தே சாதனையை முறியடித்த பீஸ்ட்...யுஎஸ்ஏ வசூல் எவ்வளவு தெரியுமா?
ரிலீசுக்கு தயாராகியுள்ள பீஸ்ட் தயாராகி வருகிறது. உலகம் முழுவதும் டிக்கெட் முன்பதிவு சூடு பிடித்துள்ளது. இந்நிலையில் அண்ணாத்தே படத்தை விட பீஸ்ட் அதிக வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

beast
டாக்டர் படம் மூலம் ஹிட் அடித்த நெல்சன் தற்போது விஜயின் பீஸ்ட் படத்தை இயக்கி முடித்துள்ளார். பூஜா ஹெக்டே நாயகியாக நடித்துள்ள இதில் செல்வராகவன், கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
beast
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் அனிருத் (Anirudh) இசையமைத்துள்ளார். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ளார்.
beast
அதிரடி ஆக்ஷன் கதையம்சம் கொண்ட படமாக உருவாகி உள்ள இந்த படத்திலிருந்து முன்னதாக இரு பாடல்கள் வெளியாகி ஹிட் அடித்தன அதை தொடர்ந்து டிரைலரும் வெளியானது..
beast
டிரைலர் படம் குறித்த பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. பீஸ்ட் வெளியாக இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில், டிக்கெட் புக்கிங் உலகமுழுவதும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
beast
அதோடு படத்தின் ப்ரோமோஷன் வேலைகளும் படு வேகமாக நடைபெற்று வருகிறது அந்த வகையில் தமிழில் பட ப்ரோமோஷனுக்காக நடிகர் விஜய் - நெல்சன் நேர்காணல் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுள்ளார்.
beast
அதேபோல வெளிமாநிலங்களிலும் ப்ரோமோஷன் நடைபெற்று வருகிறது. விஜய் தவிர மற்ற முக்கியஸ்தர்கள் இதில் கலந்து கொண்டுள்ளனர். சமீபத்தில் ஹைதராபாத்தில் நடைபெற்ற விழாவில் பங்கேற்ற பூஜா ஹெக்டேவின் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
beast
அமெரிக்காவில் 500க்கும் மேற்பட்ட இடங்களில் 'பீஸ்ட்' வெளியாகிறது. அங்கு பீஸ்ட்' தமிழ் மற்றும் தெலுங்கு பதிப்புகள் அமெரிக்காவில் மட்டுமே வெளியிடப்படுகின்றன. அதோடு இதுவரை அங்கு மட்டும் $415 வசூலித்து, முந்தைய முந்தைய அதிகபட்ச வசூல் தந்த'மெர்சல்' படத்தை முறியடித்து புதிய சாதனையை படைத்துள்ளது.
beast
இதற்கிடையில் பீஸ்ட் முன் பதிவு மூலம் ரஜினியின் 'அண்ணாத்தே' யுஎஸ்ஏ பிரீமியர் வசூலையும் முறியடித்து அதிக வசூல் செய்த தமிழ் படங்களில் ஆறாவது இடத்தைப் பிடித்துள்ளது. ரிலீஸுக்கு இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில், 'பீஸ்ட்' யுஎஸ்ஏ பிரீமியர் பாக்ஸ் ஆபிஸ் வசூல் முதல் 5 இடங்களுக்குள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.