- Home
- Cinema
- Arabic kuthu :கில்லி மாதிரி சொல்லி அடித்த விஜய்! ஒரே நாளில் 2 சாதனைகளை முறியடித்து கெத்து காட்டிய அரபிக்குத்து
Arabic kuthu :கில்லி மாதிரி சொல்லி அடித்த விஜய்! ஒரே நாளில் 2 சாதனைகளை முறியடித்து கெத்து காட்டிய அரபிக்குத்து
விஜய் நடித்துள்ள பீஸ்ட் படத்தில் இருந்து காதலர் தினத்தன்று வெளியிடப்பட்ட அரபிக் குத்து பாடலை அனிருத்தும், ஜோனிடா காந்தியும் இணைந்து பாடி உள்ளனர்.

கோலமாவு கோகிலா, டாக்டர் படங்களின் வெற்றியை தொடர்ந்து நெல்சன் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் பீஸ்ட் (Beast). விஜய் ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். மேலும் யோகிபாபு, செல்வராகவன், அபர்ணா தாஸ், விடிவி கணேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படம் வருகிற ஏப்ரல் மாதம் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது.
ஏற்கனவே நெல்சன் இயக்கிய கோலமாவு கோகிலா, டாக்டர் ஆகிய படங்களுக்கு இசையமைத்த அனிருத் (Anirudh), தற்போது 3-வது முறையாக அவருடன் இணைந்துள்ளார். இவர்கள் கூட்டணியில் வெளியாகும் படங்களில் சிவகார்த்திகேயனின் பாடல் வரிகள் நிச்சயம் இருக்கும். அந்தவகையில், பீஸ்ட் (Beast) படத்திற்கும் அவர் பாடல் வரிகளை எழுதி உள்ளார்.
அந்த வகையில் அவர் எழுதிய அரபிக் குத்து (Arabic kuthu) என்கிற பாடல் காதலர் தினத்தன்று வெளியிடப்பட்டது. இப்பாடலை அனிருத்தும், ஜோனிடா காந்தியும் இணைந்து பாடி உள்ளனர். இவர்கள் கூட்டணியில் இதற்கு முன் வெளியான செல்லம்மா பாடல் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில், அரபிக் குத்து பாடலும் அமோக வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில், இப்பாடல் வெளியான 24 மணிநேரத்தில் 2 முக்கிய சாதனைகளை முறியடித்துள்ளது. அதில் ஒன்று அதிக பார்வைகளை பெற்ற லிரிக்கல் வீடியோ என்கிற சாதனை. மகேஷ்பாபுவின் கலாவதி (Kalaavathi) பாடல் ஒரே நாளில் 16 மில்லியன் பார்வைகளை பெற்றதே சாதனையாக இருந்த நிலையில், விஜய்யின் அரபிக் குத்து பாடல் 25 மில்லியன் பார்வைகளை பெற்று அதனை முறியடித்துள்ளது.
மற்றொரு சாதனை அதிக லைக்குகளை பெற்ற லிரிக்கல் வீடியோ. இதற்குமுன் மாஸ்டர் (Master) படத்தில் இடம்பெற்ற குட்டி ஸ்டோரி பாடல் ஒரே நாளில் 1 மில்லியன் லைக்குகளை பெற்றிருந்த நிலையில், தற்போது அரபிக் குத்து (Arabic Kuthu) பாடல் 24 மணிநேரத்தில் 2.2 மில்லியன் லைக்குகளை பெற்று முதலிடத்தை பிடித்துள்ளது.