- Home
- Cinema
- பிரபு தேவா பட நடிகைக்கு பாலியல் துன்புறுத்தல்..சிஐஎஸ்எஃப் அதிகாரிகள் எல்லை மீறியதாக கணவர் புகார்..
பிரபு தேவா பட நடிகைக்கு பாலியல் துன்புறுத்தல்..சிஐஎஸ்எஃப் அதிகாரிகள் எல்லை மீறியதாக கணவர் புகார்..
பிரபு தேவா பாலிவுட் நாயகன் சல்மான் கானை வைத்து இயக்கிய வான்டட் (Wanted) படத்தில் நாயகியாக வந்த ஆயிஷா தாகியிடன் .சிஐஎஸ்எஃப் அதிகாரிகள் தவறாக நடந்து கொண்டதாக அவரது கணவர் குற்றம்சாட்டியுள்ளார்.

Ayesha Takia
நடிகரும் நடன இயக்குனருமான பிரபு தேவா பாலிவுட்டில் இயக்கிய வான்டட் படத்தில் சல்மான் கானுடன் ஜோடியாக நடித்தவர் பிரபல நடிகை ஆயிஷா தாகி. 2004ஆம் ஆண்டு இந்தியில் வெளியான டார்சன் தி வொண்டர் கார் என்ற தனது அறிமுகப் படத்திலேயே மிகவும் பேசப்பட்டு, பல விருதுகளை வாங்கியுள்ளார்.
Ayesha Takia
இந்தியில் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து, வரிசையாக ஹிட் படங்களை கொடுத்த இவர் மார்பகங்களை பெரிதாக்க செய்து கொண்ட அறுவைச் சிகிச்சையால் பெரிதும் கவனிக்கப்பட்ட நடிகையானார்.
Ayesha Takia
கடந்த 2009 -ம் ஆண்டு பர்ஹான் ஆஷ்மி என்பவரை திருமணம் செய்து கொண்ட பின்னர் திரைப்படங்களிலிருந்து ஒதுங்கி இருந்த இவர் பின்னர் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்தார்.
Ayesha Takia
சமூக வலைதளங்களில் வெளியிடும் புகைப்படங்களாலும் பதிவுகளாலும் தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வரும் நடிகை ஆயிஷா தாகியாவுக்கு அண்மையில்கடந்த 2018-ம் ஆண்டு தொடர்ந்து மிரட்டல் மெசேஜ்கள் வருவதாக, அவரது கணவர் பர்ஹான் ஆஷ்மி தெரிவித்திருந்தார்..
Ayesha Takia
தொழில்முறை நண்பர் ஒருவர் மீது காவல்துறையில் புகார் அளித்ததில் இருந்தே இதுபோன்ற மிரட்டல் மெசேஜ்கள் வருவதாகவும், ஆயிஷா தாகியா மட்டுமின்றி, தனது தாய் மற்றும் சகோதரிக்கும் கொலை மிரட்டல் வருவதாக புகார் அளித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
Ayesha Takia
இந்நிலையில் மீண்டும் ஒரு சர்ச்சை புகாரை கொடுத்துள்ளார் தாகியாவின் கணவர் ஃபர்ஹான் ஆஸ்மி மீண்டும் ஒரு பகீர் புகார் அளித்துள்ளார். சமீபத்தில் ட்வீட் செய்துள்ள ஃபர்ஹான் ஆஸ்மி, கோவா விமான நிலையத்தில் பணியில் இருந்த மத்திய தொழில் பாதுகாப்புப் படை (சிஐஎஸ்எஃப்) அதிகாரிகளால் தனது மனைவி துன்புறுத்தப்பட்டதாகக் கூறியுள்ளார்.
Ayesha Takia
அதோடு அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த ஆயுதமேந்திய ஆண் அதிகாரி ஒருவர் 'உடல் ரீதியாகத் தொட்டு' தனது மனைவியை வேறு வரிசையில் நிற்கச் சொன்னதாக அவர் கூறினார். மேலும் மற்ற அதிகாரி பின்னர் சோதனை செய்யும் போது பாலியல் ரீதியாக துன்புறுத்தியாகவும் தெரிவித்துள்ளார்.
Ayesha Takia
இதுகுறித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், தன் மனைவியை உடல் ரீதியாகத் தொட்டுச் சொல்ல முயன்றபோது வாக்குவாதம் தொடங்கியதாகவும், அவர்கள் தங்களை தவறாக நடத்தியதாகவும் கூறியுள்ளார்.