MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • அமரன், கோட் கூட படைக்காத சாதனை; குறைந்த பட்ஜெட்டில் 2024ல் அதிக லாபம் தந்து லப்பர் பந்து சாதனை!

அமரன், கோட் கூட படைக்காத சாதனை; குறைந்த பட்ஜெட்டில் 2024ல் அதிக லாபம் தந்து லப்பர் பந்து சாதனை!

Lubber Pandhu Most Profitable Tamil Movie of 2024: குறைந்த பட்ஜெட்டில் உருவாகி, எதிர்பாராத வசூல் சாதனை படைத்த 'லப்பர் பந்து' திரைப்படம், 2024-ம் ஆண்டின் அதிக லாபம் ஈட்டிய படமாக உருவெடுத்துள்ளது.

2 Min read
Author : Rsiva kumar
| Updated : Nov 08 2024, 02:28 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Lubber Pandhu Most Profitable Tamil Movie of 2024

Lubber Pandhu Most Profitable Tamil Movie of 2024

Lubber Pandhu Most Profitable Tamil Movie of 2024: சினிமாவில் வெற்றி தோல்விகலை எப்போதும் கணிக்க முடியாது. அதிக பட்ஜெட்டில் ப்ரீ ரிலிஸ் முன்னாடி அதிக பப்ளிசிட்டியுடன் வெளிவரும், கண்டிப்பாக வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படும் படங்கள் கூட பாக்ஸ் ஆபிஸில் மண்ணை கவ்விய படங்கள் ஏராளம். அதே நேரத்தில் எந்த ஆரவாரமும் இல்லமால், எந்தவித விளம்பரமும் இல்லாமல், சைலண்டாக திரைக்கு வந்து மவுத் பப்ளிசிட்டியால் வசூலை குவித்து பாக்ஸ் ஆபிஸ் ஹிட் கொடுத்து ஒவ்வொருவரையும் ஆச்சரியப்படுத்திய படங்களும் ஏராளம். அந்த வகையில் 2024 ஆம் ஆண்டில் சைலண்டாக திரைக்கு வந்து வெற்றி நடை போட்டு பாக்ஸ் ஆபிஸ் ஹிட் கொடுத்தது மட்டும் இல்லாமல் ஓடிடியில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்று வரும் படம் இருக்கிறது என்றால் அது லப்பர் பந்து படம் தான்.

25
Lubber Pandhu Box Office Collection

Lubber Pandhu Box Office Collection

தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சுவாசிகா, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, காளி வெங்கட், பால சரவணன், தேவதர்ஷினி, டிஎஸ்கே என்று ஏராளமான நட்சத்திரங்கள் நடிப்பில் கடந்த செப்டம்பர் 20 ஆம் தேதி திரைக்கு வந்த படம் லப்பர் பந்து. முழுக்க முழுக்க கிரிக்கெட் கதையை மையப்படுத்திய இந்தப் படம் குறைவான திரையரங்களில் வெளியானது.

முதல் நாளில் மட்டும் இந்தப் படம் ரூ.75 லட்சம் வசூல் குவித்ததாக சொல்லப்படுகிறது. இரண்டாம் நாளில் ரூ.1.5 கோடியாக உயர்ந்தது. இதே போன்று 3ஆவது நாளில் ரூ.2 கோடி அதிகரித்தது. இந்தப் படம் திரைக்கு வந்து இன்றுடன் 50 நாட்கள் ஆன நிலையில் இன்னும் சில திரையங்களில் ஒரு சில காட்சிகள் ஓடிக்கொண்டிருக்கின்றன. திரையரங்கைத் தாண்டி ஓடிடியில் இந்தப் படம் வெளியானது. அப்படியிருந்தும் திரையரங்குகளில் ஓடுவது என்பது அந்தப் படம் குவித்த சாதனை தான்.

35
Lubber Pandhu Most Profitable Tamil Movie of 2024, Lubber Pandhu OTT Release

Lubber Pandhu Most Profitable Tamil Movie of 2024, Lubber Pandhu OTT Release

ரூ.5 கோடி பட்ஜெட்டில் உருவான இந்தப் படம் ரூ.42.50 கோடி வரையில் வசூல் குவித்ததாக சொல்லப்படுகிறது. தமிழ் சினிமாவில் பாக்ஸ் ஆபிஸில் இதைவிட அதிக வசூல் செய்த படங்கள் இந்த ஆண்டு பத்துக்கும் மேல் இருந்தாலும், தயாரிப்பாளருக்கு அதிக லாபம் ஈட்டித் தந்த படம் வேறு எதுவும் இல்லை. இதன் மூலமாக இந்த 2024ஆம் ஆண்டில் அதிக லாபத்தை ஈட்டி தந்த படங்களில் பட்டியலில் லப்பர் பந்து முதலிடம் பிடித்துள்ளது. தற்போது இந்தப் படத்தின் வெற்றியை படக்குழுவினர் கேக் வெட்டியும், நினைவுப் பரிசு வழங்கியும் கொண்டாடி வருகின்றனர். அதுமட்டுமின்றி இந்த டீம் மீண்டும் இணைய இருப்பதாகவும் பேச்சு அடிபடுகிறது.

45
Lubber Pandhu Most Profitable Tamil Movie of 2024

Lubber Pandhu Most Profitable Tamil Movie of 2024

இந்தப் படத்திற்கு பிறகு அமரன் மற்றும் கோட் படங்கள் இடம் பிடித்துள்ளது. சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான அமரன் படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வந்தது. முழுக்க முழுக்க முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையப்படுத்தியப் படம் இராணுவ கதையை அடிப்படையாக கொண்டு வெளியானது. அமரன் படத்தில் சிவகார்த்திகேயன் முகுந்த் வரதராஜன் கதையில் நடித்திருந்தார்.

55
Lubber Pandhu Most Profitable Tamil Movie, Harish Kalyan,

Lubber Pandhu Most Profitable Tamil Movie, Harish Kalyan,

இராணுவ வீரராக சிவகார்த்திகேயன் நடித்த முதல் படம் இது. நேர்மறையான விமர்சனத்தை பெற்ற அமரன் படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இதுவரையில் எதிர்மறையான விமர்சனத்தை பெறாத படங்களில் பட்டியலில் அமரன் முதலிடம் பிடித்திருக்கிறது. ஆனால், அமரன் அதிக பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டிருந்தாலும் புரமோஷன், இசை வெளியீட்டு விழா என்று அதிக பப்சிட்டியோடு தான் படம் வெளியானது. இந்தப் படம் உலகம் முழுவதும் ரூ.170 கோடி வரையில் வசூல் குவித்துள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இந்த ஆண்டின் சிறந்த படங்களில் அமரன் படமும் ஒன்று. எப்படியும் இந்தப் படம் ஆஸ்கர் அல்லது தேசிய விருது பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
வாடிவாசல் படத்திற்கு சூர்யா போட்ட கண்டிஷன் - ஓகே சொல்வாரா வெற்றிமாறன்?
Recommended image2
விஜய்யை சீண்டிய திவ்யா சத்யராஜ்... களத்தில் இறங்கி தங்கச்சிக்கு தரமான பதிலடி கொடுத்த சிபிராஜ்
Recommended image3
Singappenne : மாமியாரை வழிக்கு கொண்டுவர ஆனந்தி எடுக்கும் முடிவு! துளசியின் சூழ்ச்சி அம்பலமாகுமா? சித்ரவதை செய்யும் லலிதா!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved