மீண்டும் தள்ளிப்போகும் அருண் விஜயின் யானை வெளியீடு ?
முதலில் மே மாதம் வெளியிட திட்டமிடப்பட்ட யானை ஜூன் 17ஆம் தேதி வெளியீடு என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இதன் ரிலீஸ் மேலும் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

YAANAI MOVIE
'யானை' படத்திற்காக இயக்குனர் ஹரியுடன் முதல் முறையாக அருண் விஜய் இணைந்துள்ளார். வில்லேஜ் ஆக்சன் நாயகன் படமான இது முதலில் மே மாதம் வெளியிட திட்டமிடப்பட்டு பின்னர் ஜூன் மூன்றாவது வாரத்தில் வெளியிட திட்டமிடப்பட்டது.இந்நிலையில் ஜூன் 17ஆம் தேதியிலிருந்து வெளியீடு மேலும் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.
yaanai
அருண் விஜய், ஹரி மற்றும் 'யானை' படக்குழுவினர் திரையரங்குகள் மற்றும் ரசிகர்கள் பல்வேறு இடங்களுக்குச் சென்று படத்திற்கான விரிவான விளம்பரங்களில் ஈடுபட்டுள்ளனர். இருப்பினும், தயாரிப்பாளர்கள் சில காரணங்களால் படத்தை வேறு தேதிக்கு தள்ளி வைக்கலாம் என சொல்லப்படுகிறது. 'யானை' படமும் இன்னும் தணிக்கை செய்யப்படவில்லை, மேலும் செயல்முறை தாமதமானது உள்ளிட்ட காரணங்களால் வெளியீட்டை ஒத்திவைக்கும் வாய்ப்பு உள்ளது.
yaanai movie
சாமி 2 வுக்கு பிறகு நான்கு ஆண்டு கழித்து வெளியாகவுள்ள ஹரியின் யானை 'எனுகு' என்னும் பெயருடன் தெலுங்கு டப்பிங் செய்யப்பட்ட ஒரே நேரத்தில் வெளியிடப்பட உள்ளதால், அருண் விஜய் மற்றும் 'யானை' படக்குழு இன்று ஹைதராபாத்தில் செய்தியாளர்களை சந்தித்தனர்.
yaanai movie
'யானை' படத்தில் அருண் விஜய் மற்றும் ப்ரியா பவானி சங்கர் முக்கிய வேடங்களில் நடிக்க, ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இப்படத்தின் ட்ரைலர் சில வாரங்களுக்கு முன் சிவகார்த்திகேயனால் வெளியிடப்பட்டது. அது படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இதில் சமுத்திரக்கனி , யோகி பாபு , அம்மு அபிராமி, கே.ஜி.எஃப் ராமச்சந்திர ராஜு, ராதிகா சரத்குமார், ஆடுகளம் ஜெயபாலன, இமான் அண்ணாச்சி, ராஜேஷ், ஐஸ்வர்யா, போஸ் வெங்கட், சஞ்சீவ், மற்றும் புகழ் என ஒரு நட்சத்திர பட்டாளமே படத்தில் நடித்துள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.