MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • இந்தி பட ட்யூனை சுட்டு தமிழில் ஏ.ஆர்.ரகுமான் போட்ட அடிபொலி ஹிட் பாடல்கள் பற்றி தெரியுமா?

இந்தி பட ட்யூனை சுட்டு தமிழில் ஏ.ஆர்.ரகுமான் போட்ட அடிபொலி ஹிட் பாடல்கள் பற்றி தெரியுமா?

இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இந்தி படத்திற்காக போட்ட ட்யூன்களை ஒட்டுமொத்தமாக காப்பியடித்து தமிழ் பட பாடல்களுக்கு பயன்படுத்தி வேறலெவல் ஹிட் கொடுத்திருக்கிறார்.

2 Min read
Author : Ganesh A
| Updated : Oct 10 2024, 03:02 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
AR Rahman

AR Rahman

ரோஜா படம் மூலம் அறிமுகமாகி தமிழ் சினிமாவில் ஒரு இசைப்புயலாக வலம் வருபவர் ஏ.ஆர்.ரகுமான். முதல் படத்திலேயே தேசிய விருது வென்று அசத்திய ஏ.ஆர்.ரகுமான், அதன்பின்னர் தமிழில் ஷங்கர், மணிரத்னம், பாரதிராஜா போன்ற ஜாம்பவான்களுடன் பணியாற்றி தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்தார். இந்திய திரையுலகிலேயே அதிக தேசிய விருதுகள் வாங்கிய இசையமைப்பாளர் என்கிற பெருமைக்கு சொந்தக்காரராக இருக்கும் ஏ.ஆர்.ரகுமான் இரண்டு ஆஸ்கர் விருதுகளையும் வென்று அசத்தி உள்ளார்.

24
Isaipuyal AR Rahman

Isaipuyal AR Rahman

தமிழில் பட மாஸ்டர் பீஸ் பாடல்களை கொடுத்துள்ள ஏ.ஆர்.ரகுமான் கடந்த 1999ம் ஆண்டு இசையமைத்த படம் தான் ஜோடி. இப்படத்தை பிரவீன் காந்தி இயக்கி இருந்தார். இப்படத்தில் பிரசாந்த் நாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக நடிகை சிம்ரன் நடித்திருந்தார். நடிகை திரிஷா நடிகையாக அறிமுகமானது இப்படத்தில் தான். இதில் நடிகை சிம்ரனுக்கு தோழியாக நடித்திருந்தார் திரிஷா. இப்படத்திற்காக ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்த பாடல்கள் அனைத்துமே இன்றளவும் பேசப்படுகின்றன.

இதையும் படியுங்கள்...டபுள் கேம் ஆடிய வைரமுத்து; MSV-க்கு எழுதிய அதே பாடலை ஏ.ஆர்.ரகுமானுக்கும் கொடுத்து ஹிட் பண்ணிட்டார்!

34
Doli Saja Ke Rakhna

Doli Saja Ke Rakhna

ஜோடி படத்தில் இடம்பெறும் ஒரு பொய்யாவது சொல் கண்ணே மற்றும் மேல் நாட்டு இசை ஆகிய இரண்டு பாடல்கள் தவிர மற்ற பாடல்கள் எல்லாம் காப்பியடித்து போடப்பட்டது என்று சொன்னால் நம்ப முடிகிறதா... ஆனால் அதுதான் உண்மை. ஜோடி படத்தில் இடம்பெற்ற எவர்கிரீன் ஹிட் பாடல்களான கை தட்டி தட்டி அழைத்தாயே, காதல் கடிதம், அஞ்சாதே ஜீவா, வெள்ளி மலரே ஆகிய பாடல்கள் எல்லாம் இந்தியில் பிரியதர்ஷன் இயக்கத்தில் 1998-ம் ஆண்டு வெளிவந்த Doli Saja Ke Rakhna என்கிற பாலிவுட் பட பாடல்களின் காப்பியாம்.

44
Jodi Movie

Jodi Movie

ஜோடி படத்திற்கு இசையமைக்க இயக்குனர் பிரவீன் காந்தி, ஏ.ஆர்.ரகுமானை அணுகியபோது ரகுமான் படுபிசியாக இருந்தாராம். இதனால் இசையமைக்க மறுத்திருக்கிறார். பின்னர் ஏ.ஆர்.ரகுமானிடம் பேசி அவர் இசையமைத்த இந்தி படமான Doli Saja Ke Rakhna படத்துக்கான ட்யூன்களில் இருந்து பாடல்களை உருவாக்க முடிவெடுத்து அப்பட பாடல்களை உருவாக்கி இருக்கின்றனர். பின்னர் படத்தின் பின்னணி இசையை சபேஷ் முரளியை வைத்து முடித்து படத்தை வெளியிட்டு இருக்கிறார் பிரவீன் காந்தி. 

இதையும் படியுங்கள்... ஒரே ஒரு ஓட்டில் ஏ.ஆர்.ரகுமானிடம் தேசிய விருதை பறிகொடுத்த இளையராஜா!!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஏ. ஆர். ரகுமான்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Siragadikka Aasai : சிந்தாமணியின் சகுனி வேலையால் பயந்து நடுங்கும் விஜயா... மீனாவின் பிளான் சக்சஸ் ஆகுமா?
Recommended image2
Ethirneechal Thodargiradhu : ஜனனியின் பிசினஸுக்கு வில்லனாக மாறும் சக்தி... கதைக்களத்தில் எதிர்பாரா ட்விஸ்ட்
Recommended image3
Premji Amaran Songs: என்ன கொடுமை சார் இது?" - பிரேம்ஜி பாடிய டாப் ஹிட் பாடல்களின் ஆச்சரியப் பட்டியல்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved