விஜய் கழட்டிவிட்டதால்... குக் வித் கோமாளி பிரபலத்தை வைத்து பான் இந்தியா படத்தை எடுத்து முடித்த ஏ.ஆர்.முருகதாஸ்
AR Murugadoss : இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் நீண்ட இடைவெளிக்கு பின் தயாரித்துள்ள படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் தலைப்பு வெளியாகி உள்ளது.
அஜித்தின் தீனா படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் ஏ.ஆர்.முருகதாஸ். முதல் படத்திலேயே வெற்றிவாகை சூடிய அவர், அடுத்ததாக விஜயகாந்தை வைத்து ரமணா, சூர்யா நடித்த கஜினி என அடுத்தடுத்து பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக உயர்ந்தார்.
இதன்பின்னர் விஜய்யை வைத்து துப்பாக்கி படத்தை இயக்கிய ஏ.ஆர்.முருகதாஸ், அவருடனே அடுத்தடுத்து கத்தி, சர்கார் ஆகிய படங்களை இயக்கி ஹாட்ரிக் வெற்றியை கொடுத்தார். இவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் தர்பார். ரஜினி நடிப்பில் கடந்த 2020-ம் ஆண்டு ரிலீசான இப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.
இதையடுத்து விஜய்யின் தளபதி 65 படத்தை இயக்க ஒப்பந்தமானார் ஏ.ஆர்.முருகதாஸ். இப்படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில், கதையில் திருப்தி இல்லாததால் இந்த கூட்டணி முறிந்தது. விஜய் படத்திலிருந்து வெளியேறி 2 ஆண்டுகளுக்கு மேல் ஆகும் நிலையில், அவர் இயக்க உள்ள அடுத்த படம் குறித்த அறிவிப்பை இதுவரை வெளியிடவில்லை.
இந்நிலையில், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் நீண்ட இடைவெளிக்கு பின் தயாரித்துள்ள படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் தலைப்பு வெளியாகி உள்ளது. அதன்படி இப்படத்துக்கு 1947 ஆகஸ்ட் 16 என பெயரிடப்பட்டு உள்ளது. இப்படத்தில் கவுதம் மேனன் நாயகனாக நடித்துள்ளார். மேலும் குக் வித் கோமாளி பிரபலம் புகழ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். வரலாற்று கதையம்சம் கொண்ட இப்படத்தை பான் இந்தியா படமாக வெளியிட உள்ளார்களாம். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டார்.
இதையும் படியுங்கள்... சைலன்டாக நடக்கும் திருமண வேலை! அனிருத்துக்கு விரைவில் டும்டும்டும் - பொண்ணு கீர்த்தி இல்லையாம்... அப்போ யாரு?