தனுஷுடன் இணையும் அனிகா சுரேந்திரன்..! அதுவும் இப்படி ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கிறாரா.. வெளியான தகவல்!
நடிகை அனிகா சுரேந்திரன், தனுஷின் டி50 படத்தில், முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில், நடிகர் என்பதை தாண்டி... இயக்குனர், தயாரிப்பாளர், பாடகர், லிரிக்சிஸ்ட் என பன்முக திறமையை வெளிப்படுத்தி மிகவும் பிரபலமானவர் தனுஷ். இவர் ஏற்கனவே கடந்த 2017-ம் ஆண்டு தன்னுடைய தந்தையின் முதல் பட ஹீரோவான ராஜ்கிரணை கதையின் நாயகனாக வைத்து இயக்கி இருந்த திரைப்படம் பா.பாண்டி. இந்த படத்தில் ராஜ்கிரணின் சிறிய வயது கதாபாத்திரத்தில், தனுஷ் நடித்திருந்தார்.
ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இந்த படத்தில், பிரசன்னா, ரேவதி, தனுஷ், மடோனா செபாஸ்டியன், திவ்ய தர்ஷினி, சாயா சிங், உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இதை தொடர்ந்து, பெயரிடாத படம் ஒன்றை எஸ்.ஜே.சூர்யாவை ஹீரோவாக வைத்து, தனுஷ் இயக்கிய நிலையில்... ஒரு சில காரணங்களால் இந்த படம் கை விடப்பட்டது.
பிகினி உடை முதல்... படுக்கையறை வரை..! கவர்ச்சியில் பங்கம் செய்யும் தேவியானி சர்மா..!
இதை தொடர்ந்து, தற்போது தனுஷ் தன்னுடைய 50-ஆவது படத்தை இயக்கி நடிக்க உள்ளதாக சமீபத்தில் அறிவித்தார். சன் பிச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படம்... வட சென்னை பின்னணியை மையமாக வைத்து உருவாவதாக கூறப்படுகிறது. மல்டி ஸ்டார் படமாக உருவாக உள்ள இந்த படத்தில், எஸ்.ஜே.சூர்யா, துஷாரா விஜயன், காளிதாஸ், அபர்ணா பாலமுரளி, சந்தீப் கிஷன் ஆகியோர் முக்கிய கீ ரோலில் நடிக்கிறார்கள்.
மேலும் தனுஷுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை கங்கனா, அல்லது த்ரிஷா நடிக்கலாம் என கூறப்பட்ட நிலையில், இவர்கள் இருவருமே நடிக்க வில்லை என்றும்... அபர்ணா பாலமுரளி தான் தனுஷின் ஜோடி என சில தகவல்கள் வெளியான நிலையில், தற்போது தனுஷின் டி50 படத்தில், தென்னிந்திய திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது ஹீரோயினாக கலக்கி கொண்டிருக்கும் அனிகா சுரேந்திரன், இப்படத்தில் இணைந்துள்ளார்.
இவரின் கதாபாத்திரம் குறித்த சுவாரஸ்ய தகவல் ஒன்றும் வெளியாகியுள்ளது. அதன்படி... அனிகா, வட சென்னையை சேர்ந்த, பெண்ணாக மிகவும் அழுத்தமான ரோலில் தான் நடிக்கிறாராம். தெலுங்கு மற்றும் மலையாளத்தில் ஹீரோயின் வாய்ப்பு கிடைத்தாலும், ஏனோ தமிழில் மட்டும் ஹீரோயினாக இவரால் ஜொலிக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.