- Home
- Cinema
- VJ Chitra: மறைந்தாலும் மணம் வீசும் 'பாண்டியன் ஸ்டோர்' முல்லை வி.ஜே.சித்ராவின் முதலாம் ஆண்டு நினைவு தினம்!
VJ Chitra: மறைந்தாலும் மணம் வீசும் 'பாண்டியன் ஸ்டோர்' முல்லை வி.ஜே.சித்ராவின் முதலாம் ஆண்டு நினைவு தினம்!
காதல் கணவருடன் நசரத் பேட்டையில் உள்ள, ஓட்டலில் தங்கி இருந்தபோது திடீர் என தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது. இவர் தற்கொலை செய்து கொண்டு இறந்து ஒரு வருடம் ஆகும் நிலையில், என்றும் ரசிகர்களின் மனதை விட்டு நீங்காத இவரை பற்றிய சிறு தொகுப்பு இதோ...

சின்னத்திரையில் தொகுப்பாளினியாக அறிமுகமாகி, பின் சீரியல் நடிகையாக மாறியவர் வி.ஜே.சித்ரா. இவர் நடித்த 'பாண்டியன் ஸ்டோர்' சீரியலுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். விரையில் இவரை திருமண கோலத்தில் பார்ப்போம் என நினைத்த ரசிகர்களுக்கு, கடந்த ஆண்டு காத்திருந்தது மிக பெரிய அதிர்ச்சி. தன்னுடைய காதல் கணவருடன் நசரத் பேட்டையில் உள்ள, ஓட்டலில் தங்கி இருந்தபோது திடீர் என தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது. இவர் தற்கொலை செய்து கொண்டு இறந்து ஒரு வருடம் ஆகும் நிலையில், என்றும் ரசிகர்களின் மனதை விட்டு நீங்காத இவரை பற்றிய சிறு தொகுப்பு இதோ...
சின்னத்திரையை தாண்டி, வெள்ளித்திரையில் 'கால்ஸ்' என்கிற படத்தில் நடித்திருந்தார். வெள்ளித்திரையில் நிலையான இடத்தை பிடிக்க வேண்டும் என போராடிய இவருக்கு, அந்த வாய்ப்பு கிடைத்தும்... தன்னுடைய படத்தை திரையில் காண்பதற்கு முன்னரே இவர் இறந்தது உச்சகட்ட சோகம்.
கலகலப்பாக முதல் நாள் வரை சில நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட வி.ஜே.சித்ரா, திடீர் என இதே தினம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம், பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஆரம்பத்தில் மன அழுத்தம் காரணமாக இவர் தற்கொலை செய்து கொண்டார் என்று கூறப்படும் நிலையில் இவரது உடலில் ஆங்காங்கு உள்ள ரத்த காயங்கள் இவரது மரணத்தில் சந்தேகத்தை ஏற்படுத்தியது.
வி.ஜே. சித்ராவும் அவரது வருங்கால கணவர் ஹேமத்தும், சென்னை நசரத்பேட்டையில் உள்ள ஹோட்டலில் அறை எடுத்து தங்கி இருந்த போது, இந்த சம்பவம் நடந்ததால்... ஹேமத்திடம் தீவிர விசாரணை நடத்திய போலீசார் பின்னர் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
போலீசார் துருவி துருவி இதுகுறித்து விசாரணை செய்த போது... சித்ராவின் கழுத்து மற்றும் கன்னத்தில் இருந்த காயங்கள் கூட, சித்ராவே தன்னுடைய நகத்தால் கீறியது என தெரிவிக்கப்பட்டது.
பின்னர் ஜெயிலில் அடிக்கப்பட்ட ஹேமத்தும் சிறையில் இருந்து ஜாமீன் பெற்று வெளியே வந்தார். ஆனால் சித்ராவின் பெற்றோர் தங்களுடைய மகள் தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு கோழை கிடையாது, ஹேமத்துக்கும் உரிய தண்டனை கிடைக்க வேண்டும் என தொடர்ந்து போராடி வருகிறார்கள்.
சித்ரா இறந்து இன்றுடன் 1 வருடம் ஆவதை ஒட்டி, இவருக்கு முதலாம் ஆண்டு அஞ்சலியை ரசிகர்கள் சமூக வலைத்தளம் மூலம் தெரிவித்து வருகிறார்கள். 'பாண்டியன் ஸ்டோர் ' முல்லை தன்னுடைய மூச்சை நிறுத்திக்கொண்டாலும் தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் இன்னும் மணம் வீசி கொண்டுதான் இருக்கிறது என்பதற்கு இதுவே உதாரணம்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.