Pooja Hegde: பிகினி உடையில் மாலத்தீவை சூடேற்றும் 'Beast' பட நாயகி பூஜா ஹெக்டே! லேட்டஸ்ட் கிளாமர் போட்டோஸ்!
'பீஸ்ட்' (Beast) பட நாயகி பூஜா ஹெக்டே (Pooja Hegde) தற்போது தன்னுடைய ஓய்வு நாட்களை கழிக்க மாலத்தீவுக்கு (Maldives) சென்றுள்ள நிலையில், அங்கு பிகினி உடை கவர்ச்சியில் வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
'பீஸ்ட்' (Beast) பட நாயகி பூஜா ஹெக்டே (Pooja Hegde) தற்போது தன்னுடைய ஓய்வு நாட்களை கழிக்க மாலத்தீவுக்கு (Maldives) சென்றுள்ள நிலையில், அங்கு பிகினி உடை கவர்ச்சியில் வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
இயக்குனர் மிஷ்கின் நடிகர் ஜீவாவை வைத்து இயக்கிய 'முகமூடி' திரைப்படத்தின் மூலம், அறிமுகமாகி இருந்தாலும், இந்த படம் தோல்வியை தழுவியதால் ராசி இல்லாத நடிகை என ஓரம் கட்டப்பட்டார். இவருக்கு மீண்டும் வெற்றி படங்களை கொடுத்து அட்ரஸ் கொடுத்தது, தெலுங்கு திரைப்படங்கள் தான்.
பின்னர் பாலிவுட் படங்களிலும் நடிக்க துவங்கிய இவரை, மீண்டும் தமிழில் நடிக்க வைக்க தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் ஆர்வம் காட்டிய நிலையில், ஒருவழியாக 'பீஸ்ட்' படத்தின் மூலம் நீண்ட இடைவெளிக்கு பின் பூஜா தமிழில் நடிக்க ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்.
தளபதிக்கு ஜோடியாக பீஸ்ட் படத்தில் பூஜா ஹெக்டே நடித்து வருவதால், இவர் எது செய்தாலும், அதனை ரசிகர்கள் செம்ம வைரலாக்கி வருகிறார்கள்.
இந்நிலையில், தற்போது படப்பிடிப்புகள் எதுவும் இல்லாததால், பூஜா ஹெக்டே தன்னுடைய ஓய்வு நாட்களை கழிப்பதற்காக மாலத்தீவுக்கு பறந்துள்ளார் .
அங்கு நீச்சல் குளத்தில்... பிகினி உடை தரிசனம் கொடுத்து கொண்டே... தன்னுடைய சாப்பாட்டை ருசித்து சாப்பிடும் புகைப்படங்களை பூஜா பகிர்ந்துள்ளார்.
மேலும் ஆட்டம்... பாட்டம் என இவரது மாலத்தீவு பயணம் களைகட்டி வருகிறது இதுகுறித்த, லேட்டஸ்ட் புகைப்படங்கள் ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் மத்தியில் தாறுமாறாக பார்க்கப்பட்டு, லைக்குகளை குவித்து வருகிறது.