- Home
- Cinema
- Yashika: டக்குன்னு பார்த்தா.. பக்குன்னு ஆகுதே? ஸ்ட்ராப் லெஸ் கவர்ச்சியில் எக்கு தப்பா போஸ் கொடுத்த யாஷிகா!
Yashika: டக்குன்னு பார்த்தா.. பக்குன்னு ஆகுதே? ஸ்ட்ராப் லெஸ் கவர்ச்சியில் எக்கு தப்பா போஸ் கொடுத்த யாஷிகா!
கோர விபத்தில் சிக்கி, தொடர் சிகிச்சையில் இருந்த யாஷிகா ஆனந்த் (Yashika Aannand).. தற்போது அதில் இருந்து மெல்ல மெல்ல மீண்டு வரும் நிலையில், மீண்டும் விதவிதமான போட்டோ ஷூட் நடத்தி வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்கள் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது.

இருட்டு அறையில் முரட்டு குத்து படம் மூலம் ரசிகர்களின் கவர்ச்சி புயலாக பிரபலமானவர் யாஷிகா ஆனந்த். அதன் பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் பட்டி, தொட்டி எல்லாம் பிரபலமானார்.
அதன் பின்னர் ரகுமானின் ‘துருவங்கள் 16’, விஜய் தேவரகொண்டாவின் ‘நோட்டா’, யோகி பாபுவின் ‘ஜாம்பி’ ஆகிய சில படங்களில் நடித்தார். இதில் எந்த படமும் பெரிதாக கைக்கொடுக்கவில்லை.
சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக வலம் வந்து கொண்டிருந்த யாஷிகா மகத்துடன் இவன்தான் உத்தமன், ஆரவ்வுடன் ராஜ பீம்மா, எஸ் ஜே சூர்யாவுடன் கடமையை செய், பாம்பாட்டம் ஆகிய படங்கள் படு பிசியாக நடித்து வந்தார்.
மாடலிங், சினிமா என இரட்டை குதிரையில் பிசியாக சவாரி செய்தாலும் ரசிகர்களுக்காக இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி போட்டோக்களை பதிவிட்டு வருவதையும் வழக்கமாக வைத்திருந்தார்.
அதுவும் சில சமயங்களில் ஓவர் கிளாமர் போட்டோக்களை பதிவிட்டு ரசிகர்களை வெறுப்பேற்றவும் செய்தார், இது போன்ற புகைப்படங்களுக்கு நெட்டிசன்கள் விமர்சனம் செய்யவும் தவறியது இல்லை.
இப்படி யாஷிகா போட்டோ ஷூட்... பார்ட்டி... படங்கள்... என பிசியாக வலம் வந்து கொண்டிருந்த போது தான் அந்த கோர விபத்து அரங்கேறியது.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இரவு விருந்தில் கலந்து கொண்ட பிறகு யாஷிகா தன்னுடைய நண்பர்களுடன் கிழக்கு கடற்கரைச் சாலையில் டாடா ஹேரியர் காரில் பயணம் செய்தார்
அப்போது யாஷிகா ஆனந்தின் கார், மாமல்லபுரம் அருகே கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த கோர விபத்தில் யாஷிகா ஆனந்தின் தோழியான வள்ளிசெட்டி பவனி (28) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்பாக யாஷிகா மீது மூன்று வழக்குகளின் கீழு வழக்கு பதிவு செய்யப்பட்டது.
பின்னர் தொடர் சிகிச்சையில் இருந்த யாஷிகா மீண்டும் உடல் நலம் தேறி, தன்னுடைய கவர்ச்சி அலப்பறையை துவங்கியுள்ளார். இவர் தற்போது வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் படு வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.