MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • புஷ்பா 2 படம் பார்க்க குடும்பத்தோடு வந்த ரசிகைக்கு நேர்ந்த துயரம்: சந்தியா தியேட்டரில் நடந்தது என்ன?

புஷ்பா 2 படம் பார்க்க குடும்பத்தோடு வந்த ரசிகைக்கு நேர்ந்த துயரம்: சந்தியா தியேட்டரில் நடந்தது என்ன?

Allu Arjun Pushpa 2 Movie Screening Sandhya Theatre Women Killed : புஷ்பா 2 படம் பார்க்க திரையரங்கிற்கு தனது குடும்பத்தோடு சென்ற ரசிகரை ஒருவர் கூட்ட நெரிசலில் சிக்கி பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

2 Min read
Author : Rsiva kumar
| Updated : Dec 05 2024, 10:58 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
Rashmika Mandanna, Allu Arjun Pushpa 2 Movie Review

Rashmika Mandanna, Allu Arjun Pushpa 2 Movie Review

அல்லு அர்ஜூன் மற்றும் ராஷ்மிகா மந்தான இருவரும் முன்னணி ரோலில் நடித்து வெளியான படம் புஷ்பா 2 தி ரூ. அதிக எதிர்பார்ப்புகளுக்கு மத்தியிலும், மிகுந்த நம்பிக்கையுடனும் இன்று வெளியாகியிருக்கிறது. படம் வெளியாவதற்கு முன்னதாகவே ஓடிடி, திரையரங்கு உரிமை என்று ரூ.1000 கோடி வரையில் வசூல் குவித்திருக்கிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
27
Allu Arjun, Pushpa 2 The Rule Movie Review

Allu Arjun, Pushpa 2 The Rule Movie Review

இன்று டிசம்பர் 5ஆம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் என்று ஒட்டு மொத்தமாக சினிமா உலகை தங்களுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் வகையிலும் புஷ்பா 2 இன்று வெளியாகியிருக்கிறது. தமிழில் இப்போதைக்கு பெரிய படம் எதுவும் இல்லாத நிலையில் புஷ்பா 2 படம் மீது அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்திவிட்டது. இன்னும் சற்று நேரத்தில் தமிழகத்தில் புஷ்பா 2 வெளியாக இருக்கிறது. ஆனால், மற்ற மொழிகளில் அதிகாலை ஷோவிற்கு அனுமதி அளிக்கப்பட்டது இப்போது சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

37
Pushpa 2 Box Office Collection, Pushpa 2 Pre Release Sales

Pushpa 2 Box Office Collection, Pushpa 2 Pre Release Sales

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழும் அல்லு அர்ஜூன் நடித்து 2021ஆம் ஆண்டு வெளியான படம் புஷ்பா. 3 ஆண்டுகளுக்கு பிறகு இந்தப் படத்தின் தொடர்ச்சியான புஷ்பா 2 படம் இன்று வெளியானது. இதற்கிடையில் அல்லு அர்ஜூன் எந்தப் படத்திலும் நடிக்கவில்லை. இந்த ஒரு படத்திற்காகவே 3 ஆண்டுகள் காத்திந்துள்ளார். அதற்கான பலன் தற்போது கிடைத்து வருகிறது.

47
Allu Arjun Pushpa 2 Movie Review, Pushpa 2 Movie Review

Allu Arjun Pushpa 2 Movie Review, Pushpa 2 Movie Review

மாஃபியா மன்னான புஷ்பா ராஜ் (அல்லு அர்ஜூன்) மற்றும் போலீஸ் அதிகாரியான பன்வர் சிங் ஷெகாவத் இருவருக்கும் இடையில் நடக்கும் கடுமையான காட்சிகளை மையப்படுத்திய புஷ்பா 2 படம் சுழல்கிறது. இந்த நிலையில் தான் ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் அதிகாலை ஷோ பார்க்க தன்னுடைய கணவர், குழந்தைகளுடன் வந்த ரசிகை ஒருவர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

57
Pushpa 2 The Rule Movie Review, Rashmika Mandanna

Pushpa 2 The Rule Movie Review, Rashmika Mandanna

ஹைதராபாத்தில் தில்சுக் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ரேவதி (வயது 39). இவருடைய கணவர் பாஸ்கர் மற்றும் குழந்தைகள் தேஜ் (9) மற்றும் சான்வி (7) ஆகியோருடன் ஆர்டிசி சாலையில் உள்ள சந்தியா 70 எம்எம் தியேட்டருக்கு புஷ்பா 2 படம் பார்க்க வந்துள்ளார். ஆனால், ஏற்கனவே ரசிகர்கள் படை சூழ திரையரங்கு முன்பு காத்திருந்த நிலையில், கூட்ட நெரிசலில் சிக்கியுள்ளார். கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் லத்தி சார்ஜ் பயன்படுத்தியுள்ளனர். இதனால் ரசிகர்கள் அலறி அடித்துக் கொண்டு அங்கும் இங்குமாக ஓடியுள்ளனர்.

67
Pushpa 2 The Rule Movie Review, Rashmika Mandanna

Pushpa 2 The Rule Movie Review, Rashmika Mandanna

இதனால், குழந்தைகள் உள்பட அவரும் மயங்கி விழுந்துள்ளார். இதையடுத்து துர்காபாய் தேஷ்முக் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். எனினும், அங்கு சிகிச்சை பலனின்றி ரேவதி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். குழந்தைகள் தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

77
Allu Arjun Pushpa 2 Movie Screening Sandhya Theatre

Allu Arjun Pushpa 2 Movie Screening Sandhya Theatre

இதில் என்ன ஆச்சரியம் என்றால் சந்தியா தியேட்டரில் தான் நடிகர் அல்லு அர்ஜூனும் முதல் நாள் முதல் ஷோ பார்க்க வந்துள்ளார். இப்போது இப்படியொரு சம்பவம் நடந்துள்ளது. இது போன்ற சம்பவங்கள் தமிழகத்தில் நடக்க கூடாது என்பதற்காகவே அதிகாலை காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவத்திற்கு அல்லு அர்ஜூன் தான் காரணம் என்றும், அவர் தான் அந்த பெண்ணின் குடும்பத்திற்கு உதவி செய்ய வேண்டும் என்று போன்று நெட்டிசன்கள் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
அல்லு அர்ஜுன்
ராஷ்மிகா மந்தனா
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
எலிமினேஷனில் சமந்தா கொடுத்த அதிரடி ட்விஸ்ட்.. மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியிலிருந்து முதல் ஆளாக வெளியேறியது இவரா?
Recommended image2
கே.என்.நேரு மீதான ரூ.634 கோடி ஊழல் புகாரில் எனக்கு தொடர்பா? வேறுவழியின்றி உண்மையை போட்டுடைத்த ஜனனி அசோக்குமார்
Recommended image3
Bigg Boss 10 : அக்‌ஷிதா கிரேட் எஸ்கேப்... பிக் பாஸில் இந்த வாரம் எலிமினேட் ஆகப்போகும் போட்டியாளர் யார் தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved