மாஸ் ஹீரோ: அல்லு அர்ஜூனுக்காக காத்திருக்கும் இயக்குநர்கள் – நெக்ஸ்ட் யார் தெரியுமா?
புஷ்பா, புஷ்பா 2 படங்களைத் தொடர்ந்து பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகி வரும் அட்லீ படத்திற்கு பிறகு எந்த இயக்குநரின் இயக்கத்தில் நடிக்கிறார் என்பது பற்றி பார்க்கலாம்.

அல்லு அர்ஜுனுக்காக வரிசை கட்டும் இயக்குநர்கள்
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான அல்லு அர்ஜூன் கங்கோத்ரி என்ற படம் மூலமாக சினிமாவில் அறிமுகமானார். இந்தப் படத்திற்கு ஆர்யா, ஹேப்பி, தேசமுடுரு, பருகு, ஆர்யா 2, வருடு, ஜுலாயி என்று பல படங்களில் நடித்துள்ளார். டிஜே, அல வைகுந்தபுரமுலு, புஷ்பா, புஷ்பா 2 ஆகிய படங்கள் அல்லு அர்ஜூன் சினிமா வாழ்க்கையில் திருப்பு முனையை ஏற்படுத்திய படங்கள்.
அட்லீயுடன் பான்-வேர்ல்ட் திரைப்படம்
இதில் புஷ்பா மற்றும் புஷ்பா 2 ஆகிய படங்கள் வசூல் ரீதியா ரூ.1000 கோடிக்கு அதிகமாக வசூல் குவித்து அல்லு அர்ஜூனை ஒரு பான் இந்திய ஸ்டாராக உயர்த்தின. இந்தப் படங்கள் வரிசையில் தற்போது இயக்குநர் அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் AA22XA6 என்ற படத்தில் நடித்து வருகிறார். ரூ.800 கோடி பட்ஜெட்டில் உருவாகி வரும் இந்தப் படத்தை சன் பிக்ஸ்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.
பன்னிக்காக காத்திருக்கும் இயக்குநர்கள்
'ஜவான்' ஷாருக்கானை விட அல்லு அர்ஜுனை பிரம்மாண்டமாக காட்ட அட்லீ திட்டமிட்டுள்ளார். திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் மற்றும் சந்தீப் ரெட்டி வங்கா ஆகியோர் அல்லு அர்ஜுனுக்காக கதைகளுடன் காத்திருக்கின்றனர். இருவரும் அட்வான்ஸ் வாங்கியதாக கூறப்படுகிறது. அட்லீயின் படத்திற்குப் பிறகு இவர்களில் யாருடன் அல்லு அர்ஜுன் இணைவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தமிழ் இயக்குநர்களும் அல்லு அர்ஜுனுக்காக காத்திருக்கின்றனர்.
ஐகான் ஸ்டாருக்காக தமிழ் இயக்குநர்கள்
அட்லீயுடன் இணைந்து பணியாற்றும் நிலையில், 'விக்ரம்', 'லியோ' புகழ் லோகேஷ் கனகராஜும் அவருடன் படம் செய்ய ஆர்வமாக உள்ளார். லோகேஷின் சினிமா யூனிவர்ஸில் அல்லு அர்ஜுன் இணைய வாய்ப்புள்ளது. பாலிவுட் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி, அல்லு அர்ஜுனுடன் ரூ.1000 கோடி பட்ஜெட்டில் படம் எடுக்க திட்டமிட்டுள்ளார். பிரஷாந்த் நீலும் அல்லு அர்ஜுனுடன் இணைய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் பல முக்கிய இயக்குநர்களும் அவருடன் பணியாற்ற ஆர்வமாக உள்ளனர்.
அல்லு அர்ஜுனுடன் 1000 கோடி ரூபாய் படம்
அல்லு அர்ஜுன் இப்போது படங்களை கவனமாக தேர்வு செய்கிறார். அடுத்த 5 ஆண்டுகளுக்கான திட்டத்துடன் செயல்படுகிறார். பாக்ஸ் ஆபிஸ் வெற்றியை விட, தனது இமேஜை நிலைநிறுத்தும் இயக்குநர்களுடன் பணியாற்ற விரும்புகிறார். 'புஷ்பா 3' படமும் விரைவில் தொடங்கப்பட இருக்கிறது என்று கூறப்படுகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.