- Home
- Cinema
- Alia Bhatt new look : என்னது இது..விண்டோ ஸ்கிரீன் ஸ்டைலில் பாட்டம்...வெண்மேகமாய் ஆலியா பட்..
Alia Bhatt new look : என்னது இது..விண்டோ ஸ்கிரீன் ஸ்டைலில் பாட்டம்...வெண்மேகமாய் ஆலியா பட்..
Alia Bhatt new look : வெள்ளை நிற ஸ்கிரீன் துணி போன்ற பட்டத்துடன் நடிகை ஆலியா பட் கொடுத்துள்ள போட்டோ சூட் லைக்குகளை அள்ளி வருகிறது..

alia bhatt
இந்தி திரையுலகில் பிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோனேவிற்கு அடுத்த திருமண கொண்டாட்டத்திற்காக ரசிகர்கள் காத்திருக்கும் இளம் ஜோடியாக ரன்பீர் கபூர் - ஆலியா பட் ஜோடி உள்ளது.
alia bhatt
பாலிவுட்டில் 2007ம் ஆண்டு வெளியான சாவரியா படம் மூலம் அறிமுகமான ரன்பீர் கபூர், அதன் பின்னர் வேக் அப் சித், ராஜ்நீதி, ராக்ஸ்டார், பர்ஃபி, ஹே ஜவானி ஹை திவானி, சஞ்சு உள்ளிட்ட படங்கள் மூலமாக சிறந்த நடிகராக வலம் வருகிறார்.
alia bhatt
அதேபோல் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி 2 ஸ்டேட்ஸ், உத்தா பஞ்சாப், ராஸி, கல்லி பாய் உள்ளிட்ட படங்கள் மூலமாக முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஆலியா பட்.
alia bhatt
அயன் முகர்ஜியின் பிரமாஸ்திரா படத்தில் நடித்தபோது ரன்பீர் கபூர், ஆலியா பட் இடையே காதல் ஏற்பட்டது. ரன்பீர் முன்னதாக நடிகை கத்ரீனா கைஃபை காதலித்தார். ஆலியா நடிகர் சித்தார்த் மல்ஹோத்ராவை காதலித்து பிரிந்தார்
alia bhatt
2018ம் ஆண்டில் இருந்து இருவரும் காதலித்து வருவதாக கூறப்பட்டது வந்தது. மறைந்த நடிகர் ரிஷி கபூரின் மகனான ரன்பீருக்கும், பாலிவுட்டின் முன்னணி தயாரிப்பாளரான மகேஷ் பட்டின் மகளான ஆலியாவிற்கும் திருமணம் எப்போது என ஒட்டுமொத்த இந்தி திரையுலகமே ஆவலுடன் காத்திருந்தது.
alia bhatt
ஏற்கனவே பிரபல விமர்சகர் ராஜீவ் மசாந்த் உடன் நடத்திய உரையாடலில் நடிகர் ரன்பீர் கபூரிடம் எப்போ திருமணம் என்கிற கேள்விக்கு, தனது காதலியான ஆலியா பட்டை விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போகிறேன் என அதிரடியாக ரன்பீர் கபூர் அறிவித்துள்ளார். .
alia bhatt
கொரோனாவால் 2020 -ல் நடைபெற இருந்த திருமணமும் தடைபட்டது. இந்நிலையில் ராஜீவ் மசந்தியிடம் ரன்பீர் கபூர் தெரிவித்தது குறித்து என்.டி.டிவி, தற்போது ஆலியாவிடம் கேள்வி கேட்டது. இதுக்கு பதிலளித்த ஆலியா, “ஆமாம். திருமண ஏற்பாடுகளை இந்த கொரோனா பரவல் பாழக்கிவிட்டது. எனினும், பல வருடங்களுக்கு முன்பே எனக்கும், ரன்பீருக்கும் மனதளவில் திருமணம் நடந்துவிட்டது என்று கூறியுள்ளார்..
alia bhatt
இதற்கிடையே கவர்ச்சி புகைப்படங்களால் ரசிகர்களை கவர்ந்து வரும் ஆலியா.. வெள்ளை நிற ஸ்கிரீன் துணி போன்ற பட்டத்துடன் நடிகை ஆலியா பட் கொடுத்துள்ள போட்டோ சூட் லைக்குகளை அள்ளி வருகிறது..
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.