MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • காஸ்ட்லி கிஃப்ட் கொடுத்து ஷாலினியின் பிறந்தநாளை ஸ்பெஷலாக்கிய அஜித்!

காஸ்ட்லி கிஃப்ட் கொடுத்து ஷாலினியின் பிறந்தநாளை ஸ்பெஷலாக்கிய அஜித்!

நடிகை ஷாலினி நேற்று தனது 44வது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில், அவருக்கு அஜித்குமார் காஸ்ட்லி கிஃப்ட் ஒன்றை கொடுத்து இருக்கிறார்.

2 Min read
Author : Ganesh A
| Updated : Nov 21 2024, 08:01 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Shalini Ajith

Shalini Ajith

தமிழ் திரையுலகில் தோல்வியே சந்திக்காத நடிகை என்றால் அது ஷாலினி தான். இவர் தமிழில் நடித்தது வெறும் 5 படங்கள் தான். அந்த 5 படங்களுமே வெற்றிப்படங்களாக அமைந்ததால், ஜீரோ பிளாப் நாயகியாக வலம் வருகிறார் ஷாலினி. அதுமட்டுமின்றி 5 படங்களில் தொடர் வெற்றியை கொடுத்த ஷாலினி,  முன்னணி நாயகியாக இருக்கும்போதே நடிகர் அஜித்குமாரை காதலித்து திருமணம் செய்துகொண்டு, சினிமாவை விட்டு ஒட்டுமொத்தமாக விலகினார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
Ajith Wife Shalini

Ajith Wife Shalini

கடந்த 22 ஆண்டுகளாக ஷாலினி ஒரு படத்தில் கூட தலைகாட்டவில்லை. இருந்தாலும் அவரின் படங்கள் இன்றளவும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து உள்ளன. அந்த அளவுக்கு குறுகிய காலத்திலேயே மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தார் ஷாலினி. பின்னர் நடிகர் அஜித்துடன் அமர்க்களம் படத்தில் நடித்தபோது அவர் மீது காதல் வயப்பட்ட ஷாலினி, கடந்த 2000-ம் ஆண்டு அவரை குடும்பத்தினர் சம்மதத்துடன் கரம்பிடித்தார். இந்த ஜோடிக்கு அனோஷ்கா என்கிற மகளும், ஆத்விக் என்கிற மகனும் உள்ளனர்.

இதையும் படியுங்கள்... கோலிவுட் ‘லவ் பேர்ட்ஸ்’ அஜித் - ஷாலினி ஜோடியின் வயது வித்தியாசம் தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க!

35
Shalini Ajith Kumar

Shalini Ajith Kumar

அஜித் - ஷாலினி ஜோடிக்கு திருமணமாகி கிட்டத்தட்ட 25 ஆண்டுகள் ஆனாலும் அவர்கள் இன்றளவும் அதே காதலோடு தான் இருக்கின்றனர். இதனிடையே நடிகை ஷாலினி நேற்று தனது 44-வது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு சமூக வலைதளங்கள் வாயிலாக ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர். இந்த நிலையில், நடிகை ஷாலினியின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் இணையத்தில் படு வைரலாகி வருகிறது.

45
Ajith gifted Car For Shalini Birthday

Ajith gifted Car For Shalini Birthday

அதன்படி ஷாலினி தன்னுடைய பிறந்தநாளை தனது தங்கை ஷாமிலி, தம்பி ரிச்சர்டு, மகன் ஆத்விக் மற்றும் மகள் அனோஷ்கா ஆகியோருடன் கொண்டாடி உள்ளார். நடிகர் அஜித் வெளிநாட்டில் இருப்பதால் அவரால் ஷாலினியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்துகொள்ள முடியவில்லை. இருந்தாலும் தன் மனைவிக்கு சர்ப்ரைஸாக ஒரு காஸ்ட்லி கிஃப்ட் ஒன்றை கொடுத்திருக்கிறார் அஜித். அது வேறெதுவுமில்லை தனக்கு பிடித்த லெக்சஸ் காரை மனைவி ஷாலினிக்கு பரிசாக கொடுத்துள்ளார் அஜித்.

55
Shalini Birthday Celebration

Shalini Birthday Celebration

கணவர் கொடுத்த காஸ்ட்லி கிஃப்டை தொடர்ந்து ஷாலினியின் பிறந்தநாளுக்கு அவரது மகன், மகள், தங்கை, தம்பி ஆகியோர் சேர்ந்து கேக் வெட்டி உள்ளனர். அதுவும் ஒன்றல்ல ஆளுக்கு தலா ஒரு கேக் வீதம் மொத்தம் நான்கு விதமான கேக்குகளை வெட்டி பிறந்தநாளை கொண்டாடி உள்ளார் ஷாலினி. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் இணையத்தில் படு வைரல் ஆகி வருகிறது.

இதையும் படியுங்கள்... நயன்தாராவின் காதல் கல்யாண காட்சிக்கு நெட்பிளிக்ஸ் எத்தனை கோடி கொடுத்துருக்கு தெரியுமா?

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
329
AUSAUS
(90.0 ov)330/4
Day 2
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
NZNZ
Fri, 30 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›

Recommended Stories
Recommended image1
Sai Pallavi : நல்லா சமைக்கத் தெரியணும்! வருங்கால கணவருக்கு சாய் பல்லவி வைத்த கண்டிஷன்கள் என்னென்ன?
Recommended image2
Actor Dhanush Political Entry: 234 தொகுதிகளிலும்... நடிகர் தனுஷ் அடுத்த திட்டம்.! அரசியலை நோக்கிய சைலன்ட் மூவ்?
Recommended image3
Ramayana First Review : பிரம்மாண்டத்தின் உச்சமா?... வெறும் பில்டப்பா? ராமாயணா முதல் விமர்சனம் வந்தாச்சு..!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved