ஸ்லீவ் லெஸ் உடையில் செம்ம மாடர்னாக தங்கை ஷாமிலியுடன் அஜித் மனைவி ஷாலினி..! வைரலாகும் புகைப்படம்!
திருமணத்திற்கு பின் போதுமாக சுடிதார் மட்டுமே அணியும் ஷாலினி... நீண்ட நாட்களுக்கு பின் தங்கை ஷாமிலியுடன் அழகிய மாடர்ன் உடையில் எடுத்து கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் திரையிலும் சரி, நிஜத்திலும் சரி மீண்டும், மீண்டும் ரசிக்கத் தோன்றும் டாப் ஜோடிகளில் தல அஜித் - ஷாலினி தம்பதிக்கு எப்போது தனி இடம் உண்டு. தல அஜித் ரசிகர்களைப் பொறுத்தவரை அவர் மீது எவ்வளவு அன்பும், மரியாதையும் வைத்துள்ளார்களோ அதே அளவிற்கு ஷாலினி மீதும் மதிப்பும், மரியாதையும் வைத்துள்ளனர்.
சரண் இயக்கத்தில் அஜித் - ஷாலினி நடித்த அமர்களம் படத்தின் போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. பெற்றோர்களும் காதலுக்கு பச்சைக்கொடி காட்ட, அமர்களம் படம் வெளியான அடுத்த ஆண்டே 2002ல் அஜித், ஷாலினி திருமணம் கோலாகலமாக நடந்தது.
திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து முற்றிலும் விலகிய ஷாலினி சிறந்த குடும்பத் தலைவியாகவும், அனோஷ்கா, ஆத்விக்கிற்கு சிறந்த அம்மாவாகவும் தன்னுடைய கடமையை தொடர்ந்து வருகிறார்.
அதிகம் வெளியில் கூட வரமாட்டார், முக்கிய திருமணம் என்றால் மட்டுமே அஜித்துடன் வந்து கலந்து கொள்வார்கள் .
அதே போல் மகள் அனோஷ்கா மற்றும் மகன் ஆத்விக்குடன் வெளியில் வந்தாலும், மிகவும் எளிமையாக சுடிதார் மற்றும் சேலையில் காணப்படுவாரே தவிர கா மற்ற மாடர்ன் உடைகள் அணிவது இல்லை.
இந்நிலையில் சமீபத்தில் அஜித் தன்னுடைய பிறந்தநாளை மிகவும் எளிமையாக வீட்டிலேயே கொண்டாடினார். அதில் அஜித்தின் மனைவி ஷாலினியின் தங்கை ஷாமிலியும் கலந்து கொண்டுள்ளார்.
இவர்கள் இருவரும் கருப்பு நிற ஸ்லீவ் லெஸ் லாங் கவுன் அணிந்து எடுத்து கொண்ட புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. நீண்ட நாட்களுக்கு பின் இது போன்ற மாடர்ன் டிரஸ் அணிந்தாலும் அவ்வளவு அழகாக உள்ளார் ஷாலினி.