அஜித்தின் 'துணிவு' பட டைட்டில் காப்பியடிக்கப்பட்டதா? வெளியான சில நிமிடங்களில் எழுந்த புது சர்ச்சை..!
அஜித் நடிப்பில் தற்போது வெளியாகியுள்ள 'துணிவு' படத்தின் டைட்டில் தற்போது வெளியான சில நிமிடங்களில் காப்பி சர்ச்சையில் சிக்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அஜித் ரசிகர்களின் நீண்ட நாள் கோரிக்கைக்கு பின்னர், அஜித் நடித்துள்ள... 61 ஆவது படத்தின் டைட்டில் மற்றும், பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று, மாலை திடீர் என வெளியாகி அஜித் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தது. அதன் படி இந்த படத்தின் டைட்டில், 'துணிவு' என வைக்கப்பட்டுள்ள நிலையில்... டைட்டில் குறித்த புது சர்ச்சை .
அஜித் இதுவரை நடித்திராத வித்தியாசமான கதையம்சம் கொண்ட படமாக உருவாகியுள்ளது 'துணிவு' திரைப்படம். வாங்கி கொள்ளையை மையமாக வைத்து, எடுக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு, மிகவும் பரபரப்பாக நடந்து வருகிறது. ஹைதராபாத்தில் துவங்கிய இந்த படத்தின் படப்பிடிப்பு, சென்னை, விசாகப்பட்டினம் ஆகிய இடங்களில் எடுத்து முடிக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்ததாக பாங்காங்கில் நடைபெற உள்ளது.
மேலும் செய்திகள்: செம்ம மாஸ்..! கையில் துப்பாக்கியோடு அஜித் மிரட்டலாக வெளியான பைரஸ்ட் லுக் போஸ்டர்!
அஜித் இதுவரை நடித்திராத வித்தியாசமான கதையம்சம் கொண்ட படமாக உருவாகியுள்ளது 'துணிவு' திரைப்படம். வாங்கி கொள்ளையை மையமாக வைத்து, எடுக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு, மிகவும் பரபரப்பாக நடந்து வருகிறது. ஹைதராபாத்தில் துவங்கிய இந்த படத்தின் படப்பிடிப்பு, சென்னை, விசாகப்பட்டினம் ஆகிய இடங்களில் எடுத்து முடிக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்ததாக பாங்காங்கில் நடைபெற உள்ளது.
சமூக வலைதளத்தில் தற்போது துணிவு படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் போஸ்டர் ரசிகர்களால் ஒரு பக்கம் வைரலாக்கப்பட்டு வரும் நிலையில், இந்த டைட்டில்... மற்றொரு படத்தின் காப்பி என சிலர், ட்ரோல் செய்து வருகிறார்கள். ஆனால் இப்படி ட்ரோல் செய்யப்பட்டு வரும் போஸ்டர், 'துணிவு' என்கிற குறும்படத்தின் போஸ்டர் தானே தவிர, திரைப்படத்தின் போஸ்டர் இல்லை. இது கூட தெரியாமல் சிலர் ட்ரோல் செய்து வருவதாக அஜித் ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகிறார்கள். எனினும் துணிவு படத்தின் டைட்டில் வெளியாகி சில நிமிடங்களிலேயே இப்படி ஒரு சர்ச்சையில் சிக்கி மீண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள்: முதல் முறையாக குழந்தை வீர் மற்றும் அப்பா ரஜினிகாந்துடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து சௌந்தர்யா நெகிழ்ச்சி!