MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • மீண்டும் சூடுபிடிக்கும் வலிமை அப்டேட்.... புது ரிலீஸ் பிளானுக்கு ஓகே சொன்ன அஜித் - எப்போ ரிலீஸ் தெரியுமா?

மீண்டும் சூடுபிடிக்கும் வலிமை அப்டேட்.... புது ரிலீஸ் பிளானுக்கு ஓகே சொன்ன அஜித் - எப்போ ரிலீஸ் தெரியுமா?

பொங்கல் பண்டிகையை ஒட்டி தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் வெளியாக இருந்த வலிமை திரைப்படம் கொரோனா பரவல் அதிகரித்து வருவதன்  காரணமாக தள்ளிவைக்கப்பட்டது.

1 Min read
Author : Ganesh A | Asianet News
| Updated : Jan 18 2022, 07:41 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
valimai

valimai

நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றியை தொடர்ந்து எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் 2-வது படம் வலிமை. இப்படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரித்துள்ளார். இதில் அஜித் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் ஹீரோயினாக காலா பட நடிகை ஹூமா குரேஷி நடித்துள்ளார். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25

மேலும் யோகிபாபு, குக் வித் கோமாளி புகழ் ஆகியோர் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தில் வில்லன் கேரக்டரில் பிரபல தெலுங்கு நடிகர் கார்த்திகேயா நடித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

35

ஜனவரி 13-ந் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் வெளியாக இருந்த இப்படம் கொரோனா பரவல் அதிகரித்து வருவதன்  காரணமாக தள்ளிவைக்கப்பட்டு உள்ளது. மேலும் நிலைமை சீரானது திரையரங்குகளில் வெளியிடுவோம் என படக்குழு தெரிவித்துள்ளது.

45

இதனால் ஏமாற்றம் அடைந்த ரசிகர்கள், இப்படம் எப்போ ரிலீஸ் ஆகும் என்பதை தெரிந்துகொள்ள ஆவலோடு காத்திருக்கின்றனர். அவர்களை சந்தோஷப்படுத்தும் விதமாக தற்போது வலிமை படத்தின் புது அப்டேட் வெளியாகி உள்ளது.

55

அதன்படி இப்படத்தை வருகிற மார்ச் மாத இறுதியில் திரையரங்குகளில் வெளியிட திட்டமிட்டு உள்ளார்களாம். சமீபத்தில் மும்பை சென்ற அஜித்திடம் போனி கபூர் இந்த ஐடியாவை சொல்ல, அஜித்தும் அதற்கு ஓகே சொல்லிவிட்டாராம். இந்த அப்டேட் அஜித் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
Ilaiyaraaja : இளையராஜாவை காப்பாற்ற பாடகி ஜானகி செய்த உதவி… பலருக்கும் தெரியாத ரகசியம்!
Recommended image2
Peddi First Review : ராம் சரணின் ஆக்‌ஷன் விருந்து டேஸ்டா? வேஸ்டா? பெத்தி முதல் விமர்சனம் இதோ
Recommended image3
Pandian Stores 2 : கதிர் - குமார் இடையே அடிதடி... தடுக்கப்போன முத்துவேலுக்கு நேர்ந்த விபரீதம்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved