10 வயசுதான் ஆகுது; அதற்குள் ரேஸ் கார் ஓட்ட கற்றுக் கொண்ட அஜித் மகன் ஆத்விக்!
நடிகர் அஜித்குமார் ரேஸில் ஆர்வம் காட்டி வருவதைப் போல் அவரது மகன் ஆத்விக்கும் தந்தையுடன் ரேஸ் கார் ஓட்டி அசத்தியபோது எடுத்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் வைரலாகிறது.

Aadvik Ajithkumar Drive Race Car : தமிழ் திரையுலகில் முன்னணி மாஸ் நடிகராக வலம் வருபவர் அஜித். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த விடாமுயற்சி தோல்வியை சந்தித்தது. இதையடுத்து குட் பேட் அக்லி படம் மூலம் கம்பேக் கொடுக்க காத்திருக்கிறார் அஜித். இப்படம் வருகிற ஏப்ரல் 10ந் தேதி திரைக்கு வர உள்ளது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார். இதனை மைத்ரீ மூவி மேக்கர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து உள்ளார்.
கார் ரேஸில் பிசியான அஜித்
குட் பேட் அக்லி படத்தின் ரிலீஸ் வேலை பிசியாக சென்றுகொண்டிருக்கிறது. வழக்கம்போல் இந்த படத்திற்கான புரமோஷனிலும் கலந்துகொள்ளாத அஜித் தற்போது பேமிலியோடு தன் நேரத்தை கழித்து வருகிறார். கடந்த சில மாதங்களாக கார் ரேஸில் கலந்துகொள்வதற்காக வெளிநாடுகளில் இருந்த அஜித், தற்போது சென்னை திரும்பி உள்ளார். சென்னை வந்த பின்னரும் கார் ரேஸில் தான் அவரது கவனம் இருந்து வருகிறது. ஆனால் இந்த முறை அவர் ரேஸ் விட்டது அவரது மகனுடன்.
இதையும் படியுங்கள்... Ajith Photo: கிளீன் ஷேவ்... நியூ லுக்கில் மாஸ் காட்டும் அஜித்தின் செல்ஃபி புகைப்படம் வைரல்!
அஜித் உடன் கார் ரேஸ் சென்ற ஆத்விக்
அஜித் மகனுக்கு 10 வயசு தான ஆகுது, அவர் எப்படி கார் ரேஸில் கலந்துகொண்டார் என்று தானே யோசிக்கிறீர்கள். இது கோ கார்ட் எனப்படும் சிறிய ரக கார்களின் பந்தயம். சென்னையில் உள்ள இந்த கோ கார்ட் கார் ரேஸுக்கான டிராக்கிற்கு தன் மனைவி மற்றும் மகன் ஆத்விக்கை அழைத்து சென்ற அஜித். தன் மகன் ஆத்விக் உடன் கார் ரேஸ் ஓட்டி அசத்தி உள்ளார். தந்தை ரேஸராக பல கார்களை ஓட்டி இருந்தாலும் வேகத்தில் அவருக்கு டஃப் கொடுத்து அசத்தி உள்ளார் ஆத்விக்.
ஆத்விக்கின் திறமைக்கு குவியும் பாராட்டு
தந்தையும் மகனும் போட்டிபோட்டு கார் ரேஸ் ஓட்டுவதை பார்த்து ரசித்த ஷாலினி, அந்த அழகிய தருணத்தை வீடியோவாகவும் எடுத்து தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 10 வயதிலேயே பயமின்றி காரை வேகமாக ஆத்விக் ஓட்டியதை பார்த்து வாயடைத்துப் போன ரசிகர்கள், அஜித் வீட்டில் அடுத்த ரேஸர் ரெடியாகிவிட்டார் என கமெண்ட் செய்து வருகின்றனர். ஆத்விக்கின் இந்த கார் ரேஸ் தான் தற்போது சோசியல் மீடியாவில் செம டிரெண்டிங் ஆக உள்ளது.
இதையும் படியுங்கள்... இத்தாலி கார் ரேஸில் 3ஆவது இடம் பிடித்த அஜித் அண்ட் கோ – வெற்றியை கொண்டாடிய தருணம் வைரல்!