MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • அதற்குள் அஜித்தின் துணிவு ஓடிடி உரிமை விற்றுப்போனது ..மிகப்பெரிய விலைக்கு வாங்கிய பிரபல நிறுவனம்

அதற்குள் அஜித்தின் துணிவு ஓடிடி உரிமை விற்றுப்போனது ..மிகப்பெரிய விலைக்கு வாங்கிய பிரபல நிறுவனம்

படம் உருவாவதற்கு முன்னரே ஓடிடி விற்பனையானது ரசிகர்கள் மத்தியில் கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

2 Min read
Author : Kanmani P
| Updated : Sep 27 2022, 07:02 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Thunivu

Thunivu

சமீபத்தில் அஜித்குமாரின் நடிப்பில் வெளியாக இருந்த வலிமை திரைப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றிருந்தது. முன்னதாக எச். வினோத், போனி கபூர் கூட்டணியில் உருவாகி இருந்த நேர்கொண்ட பார்வையும் மிதமான வரவேற்பை மட்டுமே பெற்றது. இந்த நிலையில் தற்போது மூன்றாவது முறையாக துணிவு படத்தின் மூலம் இந்தக் கூட்டணி அமைந்துள்ளது. இதன் பட குழு நடிகர்கள் என டீம் குறித்த எந்த தகவலையும் பட குழு இதுவரை வெளியிடவில்லை. முன்னதாக ஒய்வு நேரத்தில் உலகைச் சுற்றிப் பார்க்க சென்றிருந்த அஜித் குமாரின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளத்தில் ட்ரெண்டானது.

24
Thunivu

Thunivu

தற்போது சுற்றுலா முடிந்து ஊர் திரும்பி உள்ள அஜித்குமார் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார் என்றும் கூறப்படுகிறது. ஹைதராபாத், சென்னை தற்போது தாய்லாந்தில் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தின் முதல் செட்யூல் ஹைதராபாத்தில், சென்னையில் உள்ள மவுண்ட் ரோடு போன்ற செட் அமைக்கப்பட்டு எடுக்கப்பட்டது. இந்த படத்தில் இரு வேறு தோற்றங்களில் அஜித்குமார் தோன்றுவார் என கூறப்படுகிறது. அதோடு அசுரன் நாயகி மஞ்சுவாரியர் இந்தப் படத்தில் நாயகியாக நடித்துள்ளதாகவும் சமுத்திரக்கனி முக்கிய ரோலில் நடித்துள்ளதாகவும் சமீபத்தில் தகவல் வெளியாகி இருந்தது.

பொன்னியின் செல்வன் நடிகர்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா? தீயாய் பரவும் செய்தி !

34
Thunivu

Thunivu

அஜித்குமாரின் 61வது படமான இந்த படத்தின் முதல் பார்வை சமீபத்தில் வெளியானது. சாய்வு நாற்காலியில் அமர்ந்தபடி அஜித்திருக்க துணிவு என்னும் பெயர் ரூபாய் நோட்டில் எழுதப்பட்டிருந்தது. இந்த போஸ்டரை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இது ஒருபுறம் இருக்க மறுபுறம் வாரிசு படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட அடுத்த வருட பொங்கல் அன்று துணிவு படமும் வெளியாகும் என ஒரு கருத்தும் நிலவி வருகிறது. இதனால் இரு ரசிகர்களுக்கும் இடையே மோதலும் ஏற்பட்டுவிட்டது.

44
Thunivu

Thunivu

அதோடு துரிவுபடத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் தான் தமிழகத்தில் விநியோகிக்கும் உரிமையை பெறும் என்றும் தகவல் சொல்கிறது. இந்நிலையில் துணிவு படத்தின் ஓடிடி உரிமையை மிகப்பெரிய இணையதள நிறுவனம் ஒன்று முன்கூட்டியே வாங்கிவிட்டதாகவும் சமீபத்திய செய்தி தெரிவிக்கிறது. அதாவது நெட்பிளாக்ஸ் ஓடிடி நிறுவனம் துணிவு படுத்தின்  உரிமையை மிகப்பெரிய தொகை கொடுத்து வாங்கியுள்ளதாம். படம் உருவாவதற்கு முன்னரே ஓடிடி விற்பனையானது ரசிகர்கள் மத்தியில் கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. முந்தைய படங்களின் தோல்வி காரணமாக இந்தப் படம் அதிரடி திரில்லராக அமைந்து ரசிகர்களை குஷிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விமர்சனங்களை கடந்து மீண்டும் இணையும் அட்லீ - விஜய் கூட்டணி..இந்த முறை மிகப்பெரிய பட்ஜெட்டில் தகவல் இதோ

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanmani P
அஜித் குமார்

Latest Videos
Recommended Stories
Recommended image1
திரையுலகின் ரியல் ஹீரோ! மறைந்த இயக்குநரின் மகளுக்கு உதவிய யோகி பாபு - குவியும் பாராட்டுக்கள்!
Recommended image2
கென் கருணாஸ் இயக்கிய படத்திற்கு தளபதி பட தலைப்பு! விஜய் மீது கொண்ட பாசத்தால் வைத்த அந்த பெயர் - வைரலாகும் தகவல்!
Recommended image3
திருமணத்திற்குப் பிறகு செம பிஸி! ராஷ்மிகா மந்தனா கையில் வரிசையாக 6 மெகா படங்கள் - 'நேஷனல் கிரஷ்' அதிரடி!"
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved