அஜித் தலையசைத்தால் பிரமாண்ட ரிலீஸ் உண்டு...மாஸ் பிளான் போட்ட துணிவு டீம்
ஒரு வேலை அஜித் சம்மதம் தெரிவித்தால் சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் மிகப்பெரிய அளவில் நிகழ்ச்சியை நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளனர் என்றும் கூறப்படுகிறது.

தமிழ் திரை உலகில் முக்கிய நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவர் நடிப்பில் ஏற்கனவே நேர்கொண்ட பார்வை, வலிமை என இரு படங்கள் வெளியாகி இருந்தது. மூன்றாவது முறையாக தற்போது துணிவு என்னும் படம் உருவாகி வருகிறது.
துணிவு படத்தை தயாரிப்பதன் மூலம் மூன்றாவது முறையாக போனி கபூர் - அஜித் கூட்டணியும் அமைந்துள்ளது. இந்த படத்தில் மலையாள நடிகை மஞ்சு வாரியர், பிக் பாஸ் பிரபலங்கள் சிபி, பாவணி, அமீர் உள்ளிட்டோரும் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.
ஜிப்ரான் இசையமைப்பில் படம் உருவாகி உள்ளது. இதன் மூலம் அஜித் மற்றும் ஜிப்ரான் கூட்டணி முதல் முறையாக அமைந்துள்ளது. இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியாகிய நல்ல வெற்றிகளை பெற்றிருந்தது.
Ajith
இந்த படம் வரும் பொங்கல் ஸ்பெஷலாக வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல விஜய் நடித்துவரும் வாரிசு படமும் அதே நாளில் தான் வெளியாவதால் அதிக எதிர்பார்ப்பு இருந்துள்ளது. துணிவு படத்தின் வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ் பெற்றுள்ளது.
ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸும், சாட்டிலைட் உரிமையை கலைஞர் டிவியும் பெற்றுள்ளது. படம் ரிலீசுக்கு முன்பே அதிக விலைக்கு துணிவு படம் விற்பனையாகிவிட்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் துணிவு படத்தின் ப்ரீ ரிலீஸில் கலந்து கொள்ள அஜித்திடம் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறதாம். ஒரு வேலை அஜித் சம்மதம் தெரிவித்தால் சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் மிகப்பெரிய அளவில் நிகழ்ச்சியை நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளனர் என்றும் கூறப்படுகிறது.