MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Ajith Kumar: சவாலை வென்று சாதித்த அஜித்! பெல்ஜியம் கார் ரேஸில் இந்திய கொடியுடன் கெத்து காட்டிய தருணம்!

Ajith Kumar: சவாலை வென்று சாதித்த அஜித்! பெல்ஜியம் கார் ரேஸில் இந்திய கொடியுடன் கெத்து காட்டிய தருணம்!

Ajith Kumar Racing: நடிகர் அஜித் குமார், மிகவும் பெல்ஜியம் நகரில் நடந்த 24 மணிநேர கார் ரேஸில் 2-ஆவது இடத்தை பிடித்து சாதித்துள்ளார். இதை தொடர்ந்து இவருக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.

2 Min read
Author : Rsiva kumar
Published : Apr 21 2026, 01:01 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
சாதனை மன்னன் அஜித் குமார்:
Image Credit : stockPhoto

சாதனை மன்னன் அஜித் குமார்:

தமிழ் சினிமாவில், முன்னணி நடிகராக தனக்கென தனித்த இடத்தை பிடித்தவர் அஜித் குமார், சினிமாவைத் தாண்டியும், பல சாதனைகள் படைத்து வருகிறார். குறிப்பாக கார் பந்தயத்தில் இவர் காட்டும் ஈடுபாடு மற்றும் திறமை, ரசிகர்களையும் விளையாட்டு உலகினரையும் பிரமிக்கவைத்து வருகிறது.

26
ரேசிங்கில் கவனம் செலுத்தும் அஜித்:
Image Credit : Instagram/@shaliniajithkumar2022

ரேசிங்கில் கவனம் செலுத்தும் அஜித்:

சமீபத்தில் வெளியான ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்திற்குப் பிறகு, அஜித்குமார் தனது கவனத்தை அதிகமாக கார் ரேசிங்கில் திருப்பினார். இந்த ஆர்வம் சாதாரண பொழுதுபோக்காக இல்லாமல், முழுமையான தொழில்முறை முயற்சியாக மாறியது. அதன் ஒரு பகுதியாகவே அவர் தனது சொந்த ரேசிங் அணியான ‘Ajith Kumar Racing’ அணியை தொடங்கினார். இந்த அணி குறுகிய காலத்திலேயே சர்வதேச அளவில் தன்னை நிரூபிக்கத் தொடங்கியது.

36
திறமையை நிரூபித்த அஜித்தின் அணி
Image Credit : X

திறமையை நிரூபித்த அஜித்தின் அணி

அஜித்தின் அணியினர் பல்வேறு நாடுகளில் நடைபெற்ற முக்கியமான போட்டிகளில் பங்கேற்று தொடர்ந்து தங்களின் திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர். குறிப்பாக துபாய், பெல்ஜியம், ஸ்பெயின், மற்றும் அபுதாபி போன்ற இடங்களில் நடந்த சர்வதேச ரேசிங் போட்டிகளில், பங்கேற்று பல விருதுகளையும் வெற்றிகளையும் பெற்றனர். இது ஒரு நடிகரின் பொழுதுபோக்கு முயற்சியைத் தாண்டி, அஜித்தை ஒரு சிறந்த விளையாட்டு வீரராகவும் உயர்த்திக்காட்டியது.

46
2-ஆவது இடத்தை கைப்பற்றிய அஜித்:
Image Credit : X

2-ஆவது இடத்தை கைப்பற்றிய அஜித்:

இதற்கிடையில், சமீபத்தில் நடைபெற்ற Creventic European Series தொடரில் அஜித்குமார் ரேசிங் அணி, 9வது இடத்தைப் பெற்றது. இந்த நிலைமை அடுத்தடுத்த போட்டிகளுக்கான தகுதியையும் அனுபவத்தையும் வழங்கியது. அதனைத் தொடர்ந்து, பெல்ஜியத்தில் நடைபெற்ற 24H Series GT3 Pro-Am கார் பந்தயத்தில் அஜித்தின் அணி மிகச்சிறப்பாக செயல்பட்டு 2வது இடத்தைப் பிடித்துள்ளது. இது அவர்களின் இதுவரையிலான முக்கியமான சாதனைகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.

56
இந்திய கொடியுடன் பெருமைப்பட்ட தருணம்:
Image Credit : Twitter

இந்திய கொடியுடன் பெருமைப்பட்ட தருணம்:

இந்த வெற்றிக்குப் பிறகு, அஜித்குமார் தனது அணியினருடன் இணைந்து இந்திய தேசியக் கொடியை உயர்த்தி வெற்றியை கொண்டாடிய காட்சி ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது. சினிமா ரசிகர்கள் மட்டுமின்றி, விளையாட்டு ரசிகர்களும் அவரின் இந்த சாதனையை பாராட்டி வருவது குறிப்பிடத்தக்கது. ஒரு நடிகர் சர்வதேச அளவிலான கார் பந்தயத்தில் இவ்வாறு முன்னேறுவது இந்தியாவுக்கு பெருமை சேர்க்கும் விஷயமாகவும் பார்க்கப்படுகிறது. மேலும், இந்த வெற்றி அஜித்குமார் மற்றும் அவரது அணிக்கான புதிய வாய்ப்புகளைத் திறந்துவைத்துள்ளது. தொடர்ச்சியாக பல்வேறு சர்வதேச போட்டிகளில் பங்கேற்று மேலும் உயர்ந்த நிலைகளை அடைய அவர்கள் திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகின்றன.

66
புதிய படம் மீதான எதிர்பார்ப்பு:
Image Credit : Asianet News

புதிய படம் மீதான எதிர்பார்ப்பு:

அடுத்தடுத்து விளையாட்டு போட்டிகளில் கவனம் செலுத்தி வந்த அஜித், கூடிய விரையில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்க உள்ள, புதிய படத்திலும் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படம் குறித்த அறிவிப்புக்காக ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
அஜித் கார் பந்தயம்
அஜித் குமார்
தமிழ் சினிமா
சினிமா
சினிமா காட்சியகம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
இந்தியாவின் டாப் நடிகர்கள் பட்டியல் வெளியீடு.. விஜய் படைத்த சாதனை
Recommended image2
யூத் முதல் LIK வரை... அதிக வசூலை வாரிசுருட்டிய டாப் 6 தமிழ் படங்கள் என்னென்ன?
Recommended image3
மீண்டும் ஒரே வீட்டில் விஜய் - சங்கீதா.?! முதல்வர் பதவியேற்பு விழாவில் ஒன்றாக பங்கேற்க திட்டம்.?! திருவிழா கோலத்தில் நீலாங்கரை.!!!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved