- Home
- Cinema
- Ajithkumar: அஜித் மகளா இது..? அம்மா ஷாலினியை மிஞ்சிய அழகில்.. கண்ணாடியோடு செம்ம ஸ்டைலிஷ் போஸ் கொடுத்த அனோஷ்கா!
Ajithkumar: அஜித் மகளா இது..? அம்மா ஷாலினியை மிஞ்சிய அழகில்.. கண்ணாடியோடு செம்ம ஸ்டைலிஷ் போஸ் கொடுத்த அனோஷ்கா!
தல அஜித் (Ajith) இந்த வருட தீபாவளியை தன்னுடைய குடும்பத்துடன் கொண்டாடி மகிழ்ந்த நிலையில், இவர் தன்னுடைய மனைவி ஷாலினியுடன் (Shalini) எடுத்து கொண்ட புகைப்படம் ஏற்கனவே வைரலாக பார்க்கப்பட்ட நிலையில், தற்போது அஜித்தின் மகள் அனோஷ்காவின் (Anoshka Ajith) தீபாவளி கொண்டாட்ட புகைப்படம் வெளியாகி வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

தல அஜித்துக்கு கோலிவுட் திரையுலகில் எவ்வளவு வெறித்தனமான ரசிகர்கள் உள்ளனர் என்பது, அனைவருமே அறிந்தது தான். இவரை பற்றியோ இவரது குடும்பத்தினர் பற்றியோ ஏதேனும் புகைப்படம் வெளியானால், முதலில் அதனை வைரலாக்கி விட்டு தான் தல ரசிகர்களுக்கு அடுத்த வேலை.
அதிலும் தல குடும்பத்தின் தீபாவளி கொண்டாட்டம் என்றால், சொல்லவே வேண்டாம்... தீபாவளியன்று அஜித் தன்னுடைய காதல் மனைவி ஷாலினியுடன் எடுத்து கொண்ட புகைப்படம் வெளியான நிலையில் அது வைரலாக பார்க்கப்பட்டது.
அதில் இந்த வருட தீபாவளியை, தமிழர்களின் பாரம்பரிய உடையான... சிவப்பு நிற சட்டை மற்றும் வேஷ்டி அணிந்து தல கொண்டாடியதை பார்க்க முடிந்தது . அதே போல்... அவரது மனைவி ஷாலினி மஞ்சள் நிற சல்வார் அணிந்திருந்தார்.
இதை தொடர்ந்து ஷாலினியின் தங்கை ஷாமிலி, தன்னுடைய அக்காவுடன் எடுத்து கொண்ட புகைப்படம் ஒன்றும் வெளியாகி வைரலாக நிலையில் தற்போது யாரும் எதிர்பாராத விதமாக, அஜித் மகள் அனோஷ்காவின் புகைப்படம் வெளியாகியுள்ளது.
இந்த புகைப்படத்தில், அனோஷ்கா தன்னுடைய அம்மா மற்றும் சித்தியுடன் பேபி பிங்க் நிற ஸ்டைலிஷ் சல்வாரில், கண்ணாடி போட்டு கொண்டு உள்ளார். இந்த புகைப்படம், தற்போது அஜித் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.