- Home
- Cinema
- Dhanush Divorce : 'நோ மீன்ஸ் நோ' என முரண்டு பிடிக்கும் தனுஷ்... கோபத்தில் பெயரை நீக்கி அதிரடி காட்டிய ஐஸ்வர்யா
Dhanush Divorce : 'நோ மீன்ஸ் நோ' என முரண்டு பிடிக்கும் தனுஷ்... கோபத்தில் பெயரை நீக்கி அதிரடி காட்டிய ஐஸ்வர்யா
தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவை மீண்டும் சேர்த்து வைக்கும் முயற்சியும் ஒரு புறம் மும்முரமாக நடந்து வந்தது. குடும்பத்தினரும், நெருங்கிய நண்பர்களும் இதற்கான முயற்சியில் ஈடுபட்டிருந்தனர்.

நடிகர் தனுஷுக்கும் (Dhanush), ரஜினியின் மகள் ஐஸ்வர்யாவுக்கும் (AIshwaryaa) கடந்த 2004-ம் ஆண்டு திருமணமானது. இத்தம்பதிக்கு யாத்ரா, லிங்கா என இரண்டு மகன்கள் உள்ளனர். தனுஷுக்கும், ஐஸ்வர்யாவுக்கும் திருமணமாகி 18 ஆண்டுகள் ஆகிறது. இந்த நிலையில், கடந்த மாதம் இருவரும் அறிக்கை வெளியிட்டு விவாகரத்து செய்து பிரிவதாக அறிவித்தனர். இதனை சற்றும் எதிர்பாராத ரசிகர்கள் மிகுந்த அதிர்ச்சி அடைந்தனர்.
தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவின் இந்த எதிர்பாரா அறிவிப்பு சமூக வலைதளங்களை அதிர வைத்தது. ரசிகர்கள் அனைவரும் ஏன் இந்த முடிவு, தயவு செய்து மீண்டும் சேர்ந்து விடுங்கள் என தனுஷுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். அதேபோல் இவர்களது விவாகரத்து முடிவால் நடிகர் ரஜினி (Rajini) கடும் மன உளைச்சல் அடைந்ததாகவும் கூறப்பட்டது.
தனுஷ் (Dhanush) மற்றும் ஐஸ்வர்யாவை மீண்டும் சேர்த்து வைக்கும் முயற்சியும் ஒரு புறம் மும்முரமாக நடந்து வந்தது. குடும்பத்தினரும், நெருங்கிய நண்பர்களும் இதற்கான முயற்சியில் ஈடுபட்டிருந்தனர். குறிப்பாக இருவரது நட்பு வட்டாரத்தினரும், அவர்களை மீண்டும் சேர்ந்து வைக்க தீவிர முயற்சி மேற்கொண்டு வந்தனர்.
ஆனால் பிரிந்து வாழப்போகும் முடிவில் தனுஷ் உறுதியாக இருக்கிறாராம். மீண்டும் சேர்த்து வைக்க முயல்பவர்களிடம் 'நோ மீன்ஸ் நோ' என கறாராக சொல்லிவிட்டாராம் தனுஷ் (Dhanush). இருப்பினும் அவர்கள் இருவரும் விவாகரத்து செய்யப்போவதில்லை என்ற தகவலும் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் உள்ளது.
இவ்வளவு நாளாக தன் பெயருக்கு பின்னால் இருந்த தனுஷின் பெயரை மாற்றாமல் இருந்த ஐஸ்வர்யா (Aishwarya), தற்போது திடீரென அவரது பெயரை நீக்கிவிட்டு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் என தனது சமீபத்திய ஆல்பம் சாங் வீடியோவில் மாற்றியுள்ளார். கோபத்தில் தான் ஐஸ்வர்யா இந்த முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது. இதன்மூலம் சேர்ந்து வாழ வேண்டாம் என்கிற தனுஷின் முடிவுக்கே ஐஸ்வர்யா வந்துவிட்டார் போல தெரிகிறது.
இதையும் படியுங்கள்.... Dhanush divorce :தனுஷ்- ஐஷ்வர்யாவை சேர்த்து வைக்க தூது போகும் காமெடி நடிகை..!இவங்கதான் அந்த சமாதானப் புறாவா..?