ஸ்போட்ஸ் டே போட்டியில் வெற்றி கோப்பையோடு நிற்கும் மகன் போட்டோவை பகிர்ந்து பெருமைப்படும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின், மூத்த மகளும்.. நடிகர் தனுஷின் முன்னாள் மனைவியுமான ஐஸ்வர்யா, தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய மகன்கள், ஸ்போட்ஸ் டே நிகழ்ச்சியில் வெற்றி கோப்பையோடு இருக்கும் புகைப்படங்களை மிகவும் மகிழ்ச்சியாக பகிர்ந்து கொண்டுள்ளார். இந்த புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு வருவதோடு ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை குவித்து வருகிறது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா, கடந்த ஆண்டு தன்னுடைய காதல் கணவரும், நடிகருமான தனுஷிடம் இருந்து விவாகரத்து பெற்று பிரிந்தார். விவாகரத்துக்கு பின்னர், இவர்களின் மகன்களான யாத்ரா மற்றும் லிங்கா இருவரும், தங்களின் அம்மாவிடம் சில நாட்களும், அப்பாவிடம் சில நாட்களும் மாறி மாறி இருந்து வருகிறார்கள்.
மேலும் தங்களுடைய மகன்களின் பள்ளி விஷயங்கள், மற்றும் போட்டிகளுக்கு ஐஸ்வர்யா மற்றும் தனுஷ் இருவரும் கலந்து கொள்வதையும் வழக்கமாக வைத்துள்ளனர். ஏற்கனவே அதுபோல் விளையாட்டு போட்டியின் போது மகன்களுக்காக இருவரும் கலந்து கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலானது.
ஆதாரத்தை காட்டுங்க... இல்ல பேசவேண்டாம்..! இயக்குனர் அமீரை வெளுத்தி வாங்கிய மோகன்.ஜி!
இந்நிலையில் இன்று காலை, ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் மகன்களான லிங்கா - யாத்ரா படிக்கும் பள்ளியில் ஸ்போட்ஸ் டே கொண்டாடப்பட்டுள்ளது. இதில் ரிலே போட்டியில் கலந்து கொண்ட யாத்ரா, முதல் பரிசை தட்டி சென்றார். இது குறித்த புகைப்படத்தையும், வெற்றி கோப்பையோடு மகன் இருக்கும் புகைப்படத்தையும் மிகவும் பெருமையோடு பகிர்ந்து கொண்டுள்ளார் ஐஸ்வர்யா.
மேலும் அவர் தன்னுடைய பதிவில், எந்த சூரியனும்.. இந்த குழந்தைகளின் விளையாட்டின் உற்சாகத்தை நிறுத்த முடியாது. அவர்கள் காலை சூரிய ஒளி.. ஓடி ஒளிந்தனர். நான் அங்கே நின்று கொண்டிருந்தபோது, என் மகன்களைப் பார்த்து சிரித்து பிரகாசிக்கிறேன். என பதிவிட்டுள்ளார்.
கண்ணீரில் மூழ்கிய பி.வாசு குடும்பம்! முக்கிய பிரபலம் காலமானார்..!
ஐஸ்வர்யா தன்னுடைய அம்மா லதா ரஜினிகாந்துடன் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். அதே நேரம், இந்த போட்டியில் மகனின் வெற்றியை பார்க்க தனுஷ் வரவில்லை என கூறப்படுகிறது. எனினும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வெளியிட்ட புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு வருவதோடு, ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை குவித்து வருகிறது.