Aishwarya Rajesh : காஷ்மீர் பனிச்சாரலில் தங்க ஆப்பிளாய் மின்னும் ஐஸ்வர்யா ராஜேஷ்!பனிப்பறவையின் புகைப்படம்.
Aishwarya Rajesh latest : காஷ்மீர் பனிச்சாரலில் தங்க ஆப்பிளாய் மின்னும் ஐஸ்வர்யா ராஜேஷ்ப!னிப்பறவையின் புகைப்படம்.காஷ்மீர் பனிப்பொழிவில் ஐஸ்வர்யா ராஜேஷ் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது..
aishwarya rajesh latest
சின்னத்திரையில் தொகுப்பாளியாக வலம் வந்த ஐஸ்வர்யா ராகேஷ் பின்னாளில் நடிகையாக மாறினார். "காக்கா முட்டை" படத்தின் மூலம் தமிழ் திரையுலகையே திரும்பிப் பார்க்க வைத்தவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்
aishwarya rajesh latest
4 பாட்டுக்கு ஆடினோமா, ஹீரோவோடு 2 ரொமான்ஸ் சீன்களில் தலை காட்டினோமா என்றில்லாமல் தன்னுடைய கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளில் மட்டுமே நடித்து வருகிறார். ‘காக்கா முட்டை’ படத்தில் இரு பிள்ளைகளுக்கு அம்மாவாக நடித்து ஆச்சரியப்படவைத்ததே அதற்கு சாட்சி.
aishwarya rajesh latest
தொடர்ந்து விக்ரம், தனுஷ், விஜய்சேதுபதி உள்ளிட்ட பெரிய ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்த ஐஸ்வர்யா ராஜேஷ், மகளிர் கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட "கனா" படத்தில் கிரிக்கெட் வீராங்கனையாகவே வாழ்ந்து விருதுகளையும், ரசிகர்களின் பாராட்டுகளையும் பெற்றார்.
aishwarya rajesh latest
சிவகார்த்திகேயனுக்கு தங்கையாக எங்க வீட்டு பிள்ளை படத்தில் நடித்து அசத்தினார். க/ பெ ரணசிங்கம் படத்தில் வெளிநாட்டில் இறந்த கணவனது உடலை கொண்டு வர போராடும் சாமானிய பெண்ணின் வலிகளை கண்முன் காட்டி மிரளவைத்தார்.
aishwarya rajesh latest
தற்போது முதன் முறையாக போலீஸ் இன்ஸ்பெக்டராக விக்னேஷ் கார்த்தி இயக்கியுள்ள திட்டம் இரண்டு திரைப்படம் ஜூலை 30ம் தேதி சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
aishwarya rajesh latest
என்ன தான் நடிப்பில் கெட்டியாக இருந்தாலும் சினிமாவில் தொடர கவர்ச்சி முக்கியம். எனவே சோசியல் மீடியாவில் அவ்வப்போது கவர்ச்சி போட்டோக்களையும் பதிவிட்டு வருகிறார்.
aishwarya rajesh latest
சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக வலம் வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் விதவிதமாக போஸ் கொடுத்து வெளியிட்டுள்ள சமீபத்திய போட்டோஸ் வைரலாகி வருகிறது.
aishwarya rajesh latest
தற்போது தமிழில் மட்டும் டிரைவர் 'ஜமுனா', 'மோகன் தாஸ்', 'தி கிரேட் இந்தியன் கிச்சன்' உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். பிசியாக நடித்து வந்த ஐஸ்வர்யா ராஜேஷ், கொரோனா காரணமாக படப்பிடிப்பு இல்லாததால், தற்போது இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வருகிறார்
aishwarya rajesh latest
அதன் ஒரு பகுதியாக காஷ்மீர் மலைப்பகுதியில் பனிச்சாரால் நனைந்தப்படி இருக்கும் வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.