- Home
- Cinema
- நயன்தாராவுக்கு நோ சொன்ன விக்னேஷ் சிவன்... ஏ.கே.62-வில் அஜித்துக்கு ஜோடியாக நடிக்கப்போவது யார் தெரியுமா?
நயன்தாராவுக்கு நோ சொன்ன விக்னேஷ் சிவன்... ஏ.கே.62-வில் அஜித்துக்கு ஜோடியாக நடிக்கப்போவது யார் தெரியுமா?
AK 62 Update : இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் கடைசியாக வெளியான காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டான நிலையில், அவருக்கு அடுத்ததாக கிடைத்த ஜாக்பாட் வாய்ப்பு தான் அஜித்தின் ஏ.கே.62.

சிம்பு - வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் கடந்த 2012-ம் ஆண்டு ரிலீசான போடா போடி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். இதையடுத்து இவர் இயக்கிய நானும் ரவுடி தான் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. விஜய் சேதுபதி நாயகனாக நடித்திருந்த இப்படம் விக்னேஷ் சிவன் வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.
ஏனெனில் இப்படத்தின் போது தான் நயன்தாராவுக்கும், விக்னேஷ் சிவனுக்கும் இடையே காதல் மலர்ந்தது. இதையடுத்து 7 வருடங்கள் உருகி உருகி காதலித்த இந்த ஜோடி கடந்த ஜூன் மாதம் திருமணம் செய்துகொண்டது. திருமணத்துக்கு பின்னரும் இருவரும் சினிமாவில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். நயன்தாரா தற்போது அட்லீ இயக்கும் ஜவான் படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.
இதையும் படியுங்கள்... திருச்சிற்றம்பலம் படத்தில் நடிக்கும் வாய்ப்பை மிஸ் பண்ணிய விஜய் டிவி ராமர்... அதுவும் என்ன ரோல் தெரியுமா?
அதேபோல் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் கடைசியாக வெளியான காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டான நிலையில், அவருக்கு அடுத்ததாக கிடைத்த ஜாக்பாட் வாய்ப்பு தான் அஜித்தின் ஏ.கே.62. லைகா நிறுவனம் தயாரிக்க உள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார். இதன் ஆரம்பக்கட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ஏ.கே.62 படத்தின் ஹீரோயின் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிக்க ஐஸ்வர்யா ராயிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா தான் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில், தற்போது விக்னேஷ் சிவன் ஐஸ்வர்யா ராயிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவது கோலிவுட் வட்டாரத்தில் பலருக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது. அஜித்தும் ஐஸ்வர்யா ராயும் ஏற்கனவே கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில் இணைந்து நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... நடிகை அமலா பாலுக்கு பாலியல் தொந்தரவு.! முன்னாள் காதலர் அதிரடியாக கைது... பரபரப்பான பகீர் பின்னணி!
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.