MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • ஐட்டம் டான்ஸ் பின்னால் ஓடும் பிரபல நடிகைகள்!! சமந்துவுக்கு அடுத்து ரெஜி! கவர்ச்சியில் அள்ளுது புஜ்ஜி!

ஐட்டம் டான்ஸ் பின்னால் ஓடும் பிரபல நடிகைகள்!! சமந்துவுக்கு அடுத்து ரெஜி! கவர்ச்சியில் அள்ளுது புஜ்ஜி!

சமந்துவுக்கு புஷ்பா பட பாடலின் மூலம் கிராப் ஏறி நிற்பதால் இதே மாதிரி ஐட்டம் பாடலுக்கு ஆட பல முக்கிய நடிகைகள் போட்டி போட துவங்கியுள்ளனராம். 

2 Min read
Author : Ganesh A | Asianet News
Published : Jan 07 2022, 10:48 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17

இந்திய சினிமாவில் ‘ஐட்டம் சாங்’ எனும் ஒரு கான்செப்ட் சில பல வருடங்களுக்கு முன்பு டெவலப் ஆனது. அதாவது படத்தின் நாயகி ஒருவராக இருப்பார், என்னதான் அவர் கிளாமராக நடித்தாலும், செக்ஸியாக ஒரு ஆட்டம் வைக்கவில்லையென்றால் படம் போணியாகாத நிலை இருந்தது. 
ஆக படத்தின் இரண்டாம் பாகத்தில், கிளைமேக்ஸை நெருங்கும் நிலையில் இப்படியொரு ஐட்டம் சாங்கினை வைத்து பெப் ஏற்றுவார்கள்.

27

இந்த பாடலுக்கு ஆடியே சில்க், அனுராதா, பபிதா, டிஸ்கோ சாந்தி என்று பல நடிகைகள் சினிமாவில் பரபரப்பானார்கள், ஓரளவு சம்பாதித்தார்கள். இந்த நடிகைகளை ஹீரோயின்களை விட பல படிகள் கீழே வைத்துதான் ட்ரீட் பண்ணுவது சினிமா துறையின் வழக்கம். ஹீரோயின்களும் பொது இடத்தில்  கூட இந்நடிகைகளோடு பழக்கம் வைத்துக் கொள்ள மாட்டார்கள். காரணம் ‘ப்ரெஸ்டீஜாம்’. 

 

37

ஆனால் காலம் தான் எல்லாவற்றையும் தலைகீழாக மாற்றிவிடுமே! அதன்படி கடந்த சில வருடங்களாக இந்த ஐட்டம் சாங்கானது சினிமாவை விட்டு மறைந்திருந்தது. அதையும் தாண்டிய் ஏதோ ஒரு படத்தில் இருந்தாலும் கூட அதற்கு, அறிமுகமேயில்லாத ஒரு மாடலை கூட்டியாந்து குத்தாட்டம் போட விடுவார்கள். 

47

ஆனால் சமீபத்தில் ‘புஷ்பா’ மூலம்  ஒரு புது டிரெண்ட் உருவாகியுள்ளது. அப்படத்தில் வந்த ஐட்டம் சாங்கிற்கு இந்தியாவின் பிஸி நடிகைகளில் ஒருவரான சமந்தா செம்ம செக்ஸியாக ஆடியுள்ளார். ராஷ்மிகா மந்தனா எனும் கும்மு ஹீரோயின் இருக்க, அவரை விட பிரபலமான சமந்தா! அதிலும் இப்பவும் ஃபுல் மார்கெட்டில் இருப்பவர் ஏன் இப்படி ஐட்டம் சாங்கிற்கு ஆடினார்? என்றால் டப்பு பாபு டப்பு. சில கோடிகள் அப்பாட்டிற்காக சமந்துக்கு சம்பளமாக தரப்பட்டது. 

57

வாங்கிய காசுக்கு வஞ்சனையில்லாமல் சமந்து அப்பாடலில் காட்டு காட்டென காட்டிவிட்டார்….ரேய்! தன்னோட நடிப்பு திறமையை டா. விவேகா அந்தப் பாடலை அதிரிபுதிரியாய் எழுதி வைக்க, ஆண்ட்ரியாவோ ஆஸம் வாய்ஸில் பாடி வைக்க பாட்டு செம்ம ஹிட்டு. டான்ஸோ ஹிட்டோ ஹிட்டு. இதற்காகவே படம் பார்க்க போனவர்கள் எக்கச்சக்கம். ஆக மொத்தத்தில் ப்ரொடக்‌ஷன் தரப்புக்கு துட்டோ துட்டு. 

67

சமந்துவுக்கு இப்பாடலின் மூலம் கிராப் ஏறி நிற்பதால் இதே மாதிரி ஐட்டம் பாடலுக்கு ஆட பல முக்கிய நடிகைகள் போட்டி போட துவங்கியுள்ளனராம். அந்த வகையில் சிரஞ்சீவி, ராம்சரண் காம்போவில் உருவாகும் ‘ஆச்சார்யா’வில், பாடி பில்டிங் நடிகை ரெஜினா செம்ம ஆட்டம் போடுகிறார் ஒரு பாட்டுக்கு. கிளாமர் மற்றும் செக்ஸியாய் பின்னிப் பேர்த்தெடுத்திருக்குதாம் பொண்ணு. 

77

அதெல்லாம் சரி…..சமந்துக்கு முன்னோடியாக, நம்ம கஸ்தூரி ‘குத்துவிளக்கு குத்துவிளக்கு’ன்னு ஆடினாரே அதை எந்த ஐட்டத்தில் சேர்க்குறதுங்க பாஸு!?

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
திரையுலகின் ரியல் ஹீரோ! மறைந்த இயக்குநரின் மகளுக்கு உதவிய யோகி பாபு - குவியும் பாராட்டுக்கள்!
Recommended image2
கென் கருணாஸ் இயக்கிய படத்திற்கு தளபதி பட தலைப்பு! விஜய் மீது கொண்ட பாசத்தால் வைத்த அந்த பெயர் - வைரலாகும் தகவல்!
Recommended image3
திருமணத்திற்குப் பிறகு செம பிஸி! ராஷ்மிகா மந்தனா கையில் வரிசையாக 6 மெகா படங்கள் - 'நேஷனல் கிரஷ்' அதிரடி!"
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved