- Home
- Cinema
- Aditi Shankar : வாய்ப்புக்காக ஏங்கும் மகள்... சான்ஸ் கொடுப்பாரா ஷங்கர்? - எல்லாம் ஓகே.. அது மட்டும் இடிக்குதே
Aditi Shankar : வாய்ப்புக்காக ஏங்கும் மகள்... சான்ஸ் கொடுப்பாரா ஷங்கர்? - எல்லாம் ஓகே.. அது மட்டும் இடிக்குதே
அதிதியின் ஒரே வருத்தம், எல்லா நடிகைகளின் கனவாக இருக்கும் ‘ஷங்கர் சார் படத்தில் ஹீரோயினாகணும்’ அப்படிங்கிற விஷயம் தனக்கு மட்டும் வாய்ப்பே இல்லை! என்பதுதான்.

மெகா இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி ‘விருமன்’ படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்துள்ளார். சூர்யா தயாரிக்கும் இப்படத்தின் கடைசி கட்ட ஷூட்டிங் ஷெட்யூலானது தேனியில் முடிவடைந்து, இப்போது போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன.
பட வாய்ப்புகளை பிடிக்க வித விதமாக போட்டோஷூட் நடத்தி அதன் புகைபடங்களை சோசியல் மீடியாவில் ஷேர் செய்து வந்தார் அதிதி. அதற்கு பலனாக தற்போது பல இயக்குநர்களிடமிருந்து அதிதிக்கு வாய்ப்புகள் கொட்ட துவங்கியுள்ளன. இதில் அவர் ஹேப்பி.
விருமன் படத்தை தொடர்ந்து கோகுல் இயக்கத்தில் உருவாகும் கொரோனா குமார் என்கிற படத்தில் லிட்டில் சூப்பர்ஸ்டார் சிம்புவுக்கு ஜோடியாக அதிதி ஷங்கரை நடிக்க வைக்க உள்ளார்களாம்.
ஆனாலும் அதிதியின் ஒரே வருத்தம், எல்லா நடிகைகளின் கனவாக இருக்கும் ‘ஷங்கர் சார் படத்தில் ஹீரோயினாகணும்’ அப்படிங்கிற விஷயம் தனக்கு மட்டும் வாய்ப்பே இல்லை! என்பதுதான்.
ஷங்கரின் தயாரிப்பில் வேண்டுமானால் நடிக்க வாய்ப்புள்ளது, ஆனால் கிளாமருக்கும் முக்கியத்துவம் கொடுத்து படமெடுக்கும் அப்பாவின் இயக்கத்தில் மகள் நடிக்க சாத்தியமில்லைதானே!
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.