அப்பா படத்துடன் போட்டி; பொங்கல் ரேஸில் அதிதி ஷங்கர் கொடுத்த செம ட்விஸ்ட்!
பொங்கல் பண்டிகைக்கு அஜித்தின் விடாமுயற்சி விலகியதை அடுத்து டஜன் கணக்கில் தமிழ் படங்கள் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ள நிலையில், தற்போது அதிதி ஷங்கர் படமும் அதில் இணைந்துள்ளது.
Shankar Daughter Aditi
2025-ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு அஜித்தின் விடாமுயற்சி, பாலா இயக்கிய வணங்கான் மற்றும் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடித்துள்ள கேம் சேஞ்சர் ஆகிய மூன்று படங்கள் மட்டுமே ரிலீஸ் ஆவதாக இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் பொங்கல் ரேஸில் இருந்து விலகுவதாக விடாமுயற்சி படக்குழு நேற்று முன்தினம் அறிவித்த நிலையில், நேற்று புத்தாண்டு முதல் பொங்கல் ரிலீஸ் படங்களின் எண்ணிக்கை மளமளவென அதிகரித்த வண்ணம் உள்ளது.
Pongal Release Movies
ஏற்கனவே வணங்கான், கேம் சேஞ்சர் படங்கள் பொங்கல் ரேஸில் உள்ள நிலையில், அதனுடன் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்த காதலிக்க நேரமில்லை, விஜயகாந்த் மகன் ஷண்முகப்பாண்டியனின் படைத் தலைவன், சுசீந்திரன் இயக்கிய 2கே லவ் ஸ்டோரி, சிபிராஜ் நடித்த டென் ஹார்ஸ், ஷான் நிகம் நடிப்பில் உருவாகி இருக்கும் மெட்ராஸ்காரன், கிஷன் தாஸின் தருணம் ஆகிய படங்கள் அதிரடியாக எண்ட்ரி கொடுத்தன.
இதையும் படியுங்கள்... விடாமுயற்சி விலகியதும் விறுவிறுவென பொங்கல் ரேஸில் குதித்த 10 படங்கள் - முழு லிஸ்ட் இதோ
Nesippaya Pongal Release
இந்த நிலையில், அந்த பட்டியலில் லேட்டஸ்டாக விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அதிதி ஷங்கர் ஹீரோயினாக நடித்துள்ள நேசிப்பாயா படமும் இணைந்துள்ளது. இப்படத்தில் நடிகர் முரளியின் மகன் ஆகாஷ் முரளி நாயகனாக நடித்துள்ளார். அவர் நடிக்கும் முதல் படம் இதுவாகும். அவருக்கு ஜோடியாக தான் இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் நடித்துள்ளார். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தை மாஸ்டர் படத்தின் தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ தயாரித்துள்ளார்.
Shankar vs Aditi shankar
நேசிப்பாயா திரைப்படம் வருகிற ஜனவரி 14ந் தேதி பொங்கல் பண்டிகையன்று ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதில் மற்றொரு ஹைலைட் என்னவென்றால் ஷங்கர் இயக்கிய கேம் சேஞ்சர் படமும் இந்த ஆண்டு பொங்கலுக்கு தான் ரிலீஸ் ஆக உள்ளது. அதற்கு போட்டியாக அவர் மகள் அதிதி ஷங்கரின் படமும் ரிலீஸ் ஆக உள்ளதால் தந்தை - மகள் இடையே பாக்ஸ் ஆபிஸ் மோதல் நிலவி உள்ளது. இதில் யார் வெற்றிபெறுகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
இதையும் படியுங்கள்... பொங்கல் ரிலீஸில் இருந்து பின் வாங்கிய 'விடாமுயற்சி'! இரண்டும் இல்லாமல் ஏமார்ந்து போன ரசிகர்கள்!