- Home
- Cinema
- Trisha latest photos : சேலையில் மொத்த அழகையும் காட்டி... செதுக்கி வைத்த சிலையாய் போஸ் கொடுத்த திரிஷா...!
Trisha latest photos : சேலையில் மொத்த அழகையும் காட்டி... செதுக்கி வைத்த சிலையாய் போஸ் கொடுத்த திரிஷா...!
சேலை, சுடிதார், பாவாடை தாவணி என விதவிதமான உடைகளில் வித்தியாசமான ஆபரணங்களை அணிந்தபடி திரிஷா போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

ஒரு படத்திலேயே சொந்த ஊருக்கு மூட்டை முடிச்சுக்களை கட்டிக்கொண்டு சென்றுவிடும் கோலிவுட் நாயகிகள் பலர் மத்தியில் , 20 வருடங்களாக தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடி போட்டு நடித்து வருகிறார் திரிஷா.
தற்போது இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள 'பொன்னியின் செல்வன்' என்கிற சரித்திர கதையம்சம் கொண்ட படத்தில் குந்தவையாக நடித்து முடித்துள்ளார் திரிஷா.
இதுதவிர இவர் நடித்து வந்த, ராங்கி, கர்ஜனை, சதுரங்க வேட்டை 2 ஆகிய படங்களின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளன. மேலும் நடிகர் மோகன்லாலுடன் 'ராம்' என்கிற படத்தை கைவசம் வைத்துள்ளார்.
இதுதவிர தெலுங்கில் தயாராகி வரும் வெப் தொடர் ஒன்றிலும் நடித்து வருகிறார் திரிஷா. பிற மொழிகளில் பிசியாக நடித்து வந்தாலும், தமிழில் அவருக்கு தற்போது பட வாய்ப்புகள் இல்லை.
இதனால் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்தை மலைபோல் நம்பி உள்ளார் திரிஷா. இப்படத்திற்கு கிடைக்கும் வரவேற்பை பொருத்துதான் தமிழ் திரையுலகில் அவரின் அடுத்தகட்ட நகர்வு இருக்கும் என கூறப்படுகிறது.
இவ்வாறு தென்னிந்திய திரையுலகில் 20 ஆண்டுகளுக்கு மேலாக நடித்து வரும் திரிஷா, தற்போது நகைக்கடை விளம்பரம் ஒன்றில் நடித்துள்ளார். அதன் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகின்றன.
சேலை, சுடிதார், பாவாடை தாவணி என விதவிதமான உடைகளில் வித்தியாசமான ஆபரணங்களை அணிந்தபடி திரிஷா போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
நீண்ட நாட்களுக்கு பின் திரிஷா போட்டோஷூட் நடத்தி உள்ளதால், அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், அவர் செதுக்கி வைத்த சிலை போல் இருப்பதாக வர்ணித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.