- Home
- Cinema
- Sunainaa New photos: செம்ம ஸ்லிம்... சிவந்த முகத்தில் ஆதவன் முத்தமிட்ட அழகிய புகைப்படங்களை பகிர்ந்த சுனைனா!
Sunainaa New photos: செம்ம ஸ்லிம்... சிவந்த முகத்தில் ஆதவன் முத்தமிட்ட அழகிய புகைப்படங்களை பகிர்ந்த சுனைனா!
கடைசியாக நடிகை சுனைனா (Sunaina) நடிப்பில், சில்லு கருப்பட்டி (SilluKaruppatti Movie) படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது உடல் எடையை குறைத்து செம்ம ஸ்டைலிஷாக இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்த தேவயானியின் தம்பி நகுலுடன் காதலில் விழுந்தேன் படம் மூலமாக அறிமுகமானவர் நடிகை சுனைனா.
அந்த படத்தில் இருவரும் கெமிஸ்ட்ரியும் வேற லெவலுக்கு ஒர்க் அவுட் ஆனதை அடுத்து, மாசிலாமணி படத்தில் மீண்டும் ஒன்றிணைந்தனர். அந்த படமும் வசூல் மற்றும் விமர்சன ரீதியாக வெற்றி பெற்றது.
அதன் பின்னர் தமிழில் சுனைனாவுக்கு பெரிதாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை. தெறி படத்தில் சிறப்பு கதாபாத்திரத்தில் தோன்றி ரசிகர்களை மகிழ்வித்தார்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு சில்லுக்கருப்பட்டி படத்தில் சமுத்தரகனிக்கு ஜோடியாக திறமையான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்தார்.
தற்போது மீண்டும் 13 ஆண்டுகளுக்குப் பிறகு நகுலுடன் இணைந்து "எரியும் கண்ணாடி" படத்தில் நடித்துள்ளார். அந்த படத்தின் போஸ்டர் மற்றும் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
கடைசியாக நடிகை சுனைனா நடிப்பில், சில்லு கருப்பட்டி படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது உடல் எடையை குறைத்து செம்ம ஸ்டைலிஷாக இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
சினிமாவில் பெரிதாக கவர்ச்சி காட்டாத சுனைனா, சோசியல் மீடியாவில் வெளியிடும் சில புகைப்படங்களில் கவர்ச்சி எட்டி பார்க்க ஆரம்பித்தது.
தற்போது, துபாய் சென்றுள்ள... சுனைனா சூரியன் முன் நின்று சூரிய ஒளி கன்னத்தில் முத்தமிட வெளியிட்ட புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.