கணவர் பிறந்த நாளில் செல்ல மகளின் முகத்தை ரசிகர்களுக்கு காட்டிய நடிகை சினேகா! அம்மாவை போலவே அழகு!
நடிகை சிநேகாவிற்கு, குழந்தை பிறந்து 8 மாதம் ஆகும் நிலையில், இன்று, தன்னுடைய கணவரின் பிறந்தநாளை முன்னிட்டு மகளின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
நடிகை சிநேகாவிற்கு ஜனவரி மாதம் அழகிய பெண் குழந்தை பிறந்தது. இதனை தை மகள் வந்தாள், என நடிகர் பிரசன்னா தெரிவித்திருந்தார்.
ஏற்கனவே சினேகா - பிரசன்னா தம்பதிக்கு 4 வயதில் விஹான் என்கிற ஆண் குழந்தை இருக்கும் நிலையில், பெண் குழந்தை பிறந்துள்ளதால் இருவருமே மிகவும் மகிழ்ச்சியாக உள்ளனர்.
இந்நிலையில் சமீபத்தில், சினேகா கர்ப்பமாக இருக்கும்போது எடுக்கப்பட்ட போட்டோ ஷூட் புகைப்படங்களை அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார் அந்த புகைப்படங்கள் ரசிகர்களால் வைரலாக பார்க்கப்பட்டது.
இதுவரை தன்னுடைய மகள் புகைப்படத்தை சற்று மறைத்த படியே காட்டி வந்த சினேகா, முதல் முறையாக தன்னுடைய அழகு மகள் போட்டோ ஷூட் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
தற்போது முதல் முறையாக தன்னுடைய கணவரின் பிறந்தநாளை முன்னிட்டு, கணவருடன் மகள் உள்ள புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.
சினேகாவின் மகன் விஹான்... தங்கை பக்கத்தில் எவ்வளவு சந்தோஷமாக உள்ளார் பாருங்கள்...
அப்படியே அம்மாவை போல்... அழகாக இருக்கும் சினேகா மகள், Aadhyantaa புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.