“தனி அறையில் பேண்டை கழட்டிவிட்டு நின்றார்”... பிரபல இயக்குநர் மீது நடிகை பாலியல் புகார்...!
நான் மறுத்தும் பலமுறை பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தார் என தனி அறையில் நடந்தவற்றை ஒளிவு மறைவின்றி பேசியுள்ளது சமூக வலைத்தளத்தில் விவாதத்தை கிளப்பியுள்ளது.
பாலிவுட்டில் ஹவுஸ்புல் முதல் மற்றும் இரண்டாம் பாகம், ஹேய் பேபி, ஹம்ஸ்கல் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் சாஜித் கான். சில படங்களில் நடித்தும் உள்ளார்.
மீடூ பிரச்சனை சூடுபிடித்த போது சாஜித் கான் மீது நடிகைகள் ராச்சல் டிம்பிள் பாவ்லா, உதவிய இயக்குநர் சலோனி சோப்ரா, பெண் பத்திரிக்கையாளர் உள்ளிட்ட பலரும் பாலியல் புகார் கூறினார்.
அது பாலிவுட்டில் மிகப்பெரிய அதிர்வலைகளை உருவாக்கிய நிலையில், தற்போது இந்தி திரையுலகின் கவர்ச்சி நடிகையான ஷெர்லின் சோப்ரா சில பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
சாஜித் கானுடன் தனக்கு நேர்ந்த மோசமான அனுபவம் குறித்து விவரித்துள்ள அவர், 2005ம் ஆண்டு என் தந்தை இறந்து சில நாட்களில் நான் சாஜித் கானை சந்தித்தேன். அப்போது அவர் அறையில் பேண்டை கழட்டிவிட்டபடி என் முன்பு நின்றார். மிகவும் மோசமாக நடந்து கொண்டார். அவருடை அந்தரங்க உறுப்பை தொட சொல்லி கட்டாயப்படுத்தினார். அப்போது நான் அதற்காக இங்கு வரவில்லை என பதிலளித்துள்ளேன்.
அப்போது இந்த குற்றச்சாட்டை பற்றி நான் பேசியிருந்தால் அவருக்கு பாலிவுட் நடிகர்கள் ஆதரவாக பேசி இருப்பார்கள். பாலிவுட் மாபியா வலிமையானது.
நான் அவர் மீது பழிசுமத்தவில்லை. நடந்த உண்மையை தான் கூறினேன். நான் மறுத்தும் பலமுறை பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தார் என தனி அறையில் நடந்தவற்றை ஒளிவு மறைவின்றி பேசியுள்ளது சமூக வலைத்தளத்தில் விவாதத்தை கிளப்பியுள்ளது.