MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • ஸ்டைல்னா என்னனு தெரியுமா?.. ஸ்டில்ஸ் போட்டு சொல்லிக்கொடுக்கும் சாக்‌ஷி அகர்வால்!

ஸ்டைல்னா என்னனு தெரியுமா?.. ஸ்டில்ஸ் போட்டு சொல்லிக்கொடுக்கும் சாக்‌ஷி அகர்வால்!

ராஜா ராணி படத்தில் வரும் அந்த பெண்ணை யாராலும் அவ்வளவு சீக்ரம் மறந்துவிட முடியாது, அந்த கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் திரையுலகில் அறிமுகமான நடிகை தான் சாக்ஷி அகர்வால்.

1 Min read
Author : Ansgar R
| Updated : Jun 29 2023, 07:58 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

கடந்த 2013ம் ஆண்டு அட்லீ இயக்கத்தில் வெளியான "ராஜா ராணி" திரைப்படத்தில் வரும் ஒரு காட்சியில் "One Cappuccino ப்ளீஸ் என்று ஹோட்டலில் கேட்கும் அதே பெண், வீட்டில் தனது தாயிடம் ஒரு காபி கொடுமா என்று கேட்டால் எப்படி இருக்கும்" என்பது குறித்த ஒரு காட்சி வரும். அந்த பெண்ணை யாராலும் அவ்வளவு சீக்ரம் மறந்துவிட முடியாது, அந்த கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் திரையுலகில் அறிமுகமான நடிகை தான் சாக்ஷி அகர்வால்.

24

அந்த படத்திற்கு பிறகு தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் என்று வெவ்வேறு மொழிகளில் அங்கொன்றும், இங்கொன்றுமாக ஒரு சில படங்களில் நடித்து வந்தார். கடந்த 2018ம் ஆண்டு பா. ரஞ்சித் இயக்கத்தில் வெளியான காலா திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் மருமகளாக இவர் நடித்திருந்தார், அந்த திரைப்படம் இவருக்கு ஒரு நல்ல பெயரை பெற்று தந்தது என்றே கூறலாம்.
 

34

அதனை தொடர்ந்து தல அஜித்தின் விசுவாசம், ஆர்யா நடிப்பில் டெடி, சுந்தர். சி-யின் அரண்மனை பாகம் 3 உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றார் சாக்ஷி. இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 3ம் பாகத்தில் போட்டியாளராகவும் பங்கேற்றிருந்தார். அகர்வால் இறுதியாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த மார்ச் மாதம் வெளியான பகீரா என்ற திரைப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரம் ஏற்று நடித்திருந்தார்.

44

இதுவரை சாக்ஷி 16 படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது, ஆனால் இந்த 2023ம் ஆண்டில் மட்டும் சுமார் ஆறு திரைப்படங்கள் இவருடைய நடிப்பில் வெளியாக காத்திருக்கிறது. அதில் 120 Hours என்ற திரைப்படம் ஒரு ஆங்கில திரைப்படம் என்பதும் குறிப்பிடத்தக்கது. தனது ட்விட்டர் பக்கத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் சாக்ஷி "ஸ்டைல் என்றால் நாம் பேசாமலே நாம் யாரென்பதை சொல்லும் ஒரு கலை" என்று தலைப்பிட்டு ஒரு போட்டோஷூட்டை வெளியிட்டுள்ளார்.   

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

AR
Ansgar R

Latest Videos
Recommended Stories
Recommended image1
ராஷ்மிகாவுக்கு விஜய் தேவரகொண்டா பெற்றோர் போட்ட கண்டிஷன்... கல்யாணத்துக்கு முன்பே இப்படியா?
Recommended image2
நிறுத்தப்படும் குமரவேல் கல்யாணம்... மீனாவிடம் குட் நியூஸ் சொன்ன தங்கமயில் - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 அப்டேட்
Recommended image3
பாடும் நிலா SPB-யின் தேன் குரல்.! கேட்பவர்களை மெய் மறக்க செய்யும் டாப் 10 சூப்பர் ஹிட் சாங்ஸ் லிஸ்ட் இதோ.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved