- Home
- Cinema
- Ritika Singh Birthday: கியூட் குழந்தை முதல்.. குத்துசண்டை வீராங்கனை ஹீரோயினாக மாறியது வரை! ரேர் போட்டோஸ்!
Ritika Singh Birthday: கியூட் குழந்தை முதல்.. குத்துசண்டை வீராங்கனை ஹீரோயினாக மாறியது வரை! ரேர் போட்டோஸ்!
நடிகை ரித்திகா சிங் (Ritika Singh), இன்று தன்னுடைய 27 ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். குத்து சண்டை வீராங்கனையாக இருந்த இவர் ஹீரோயினாக மாறி தற்போது தமிழ் சினிமாவில் கலக்கி கொண்டுள்ளார். இவரது அரிய புகைப்படங்களின் தொகுப்பு இதோ...

சிலர் நடிகர் - நடிகையாக மாறுவோம் என்பதை சற்றும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள் ஆனால் காலம் அவர்கள் திரைப்பட நடிகர் நடிகையாக மாற்றிவிடும்.
அப்படி அதிர்ஷ்டவசமாக நடிகையாக மாறியவர் தான் குத்து சண்டை வீராங்களையான ரித்திகா சிங். இவருக்கு இந்த வாய்ப்பு கிடைத்ததும் மிகவும் சுவாரஸ்யமான கதை தான்.
ரித்திகா சிங்கின் தந்தை, குத்து சண்டை வீரர் என்பதால் தன்னுடைய மகன் - மகள் இருவருக்குமே குத்து சண்டை பயிற்சி கொடுத்து வந்தார்.
ரித்திகா சிங்கும், தன்னுடைய கேரியர் குத்து சண்டை தான் என நினைத்தார். பல போட்டிகளில் பங்கேற்று ஸ்டேட் லெவல் பதக்கங்களையும் பரிசுகளையும் வென்றார்.
தன்னுடைய 'இறுதி சுற்று' படத்திற்காக தீவிரமாக இயக்குனர் சுதா கொங்கரா நாயகியை தேடி கொண்டிருந்த போது தான் இவரை பார்க்க நேர்ந்தது.
ரித்திகாவை பார்த்ததுமே இவர் தான் தன்னுடைய படத்தின் நாயகி என முடிவு செய்தார். பின்னர் இது குறித்து அவரிடம் அணுகி அவரது பெற்றோர் சம்மதத்துடன் தன்னுடைய படத்தில் நடிக்க வைத்தார்.
ரித்திகா சிங்கிக்கு முதல் படத்திலேயே நடிகர் மாதவனுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. மேலும் கதைக்கு ஏற்ற போல் நடித்து ரசிகர்களின் பாராட்டுகளை பெற்றார்.
தன்னுடைய முதல் படத்திலேயே சிறந்த அறிமுக நடிகைக்கான தேசிய விருதையும் 'இறுதி சுற்று' திரைப்படம் இவருக்கு பெற்று தந்தது.
இறுதி சுற்று படத்திற்கு பின்னர் விஜய் சேதுபதியுடன் “ஆண்டவன் கட்டளை”, ராகவா லாரன்ஸ் உடன் “சிவலிங்கா” உள்ளிட்ட படங்களில் நடித்தார் அந்த இரண்டு படங்களுமே பெரிதாக ஹிட்டாகவில்லை.
ஆனால் சமீபத்தில் அசோக் செல்வன் - ரித்திகா சிங் நடிப்பில் உருவான "ஓ மை கடவுளே" திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் சிறப்பான வரவேற்பை பெற்றது.
தொடர்ந்து பட வாய்ப்புகளை கை பற்றுவதில் தீவிரம் காட்டி வரும் ரித்திகா சிங், விதவிதமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.
அந்த வகையில் விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வாய்ப்பு தேடி வருகிறார். இந்த வருடம் இவர் நடிப்பில் பெரிதாக எந்த படமும் வெளியாகவில்லை என்றாலும், அடுத்த ஆண்டு சில படங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இன்றைய தினம் தன்னுடைய 27 ஆவது பிறந்தநாளை கொண்டாடி வரும் ரித்திகா சிங்கிற்கு ரசிகர்கள், பிரபலங்கள் என பலரும் தொடர்ந்து சமூக வலைத்தளத்தில் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.