பிறந்து சில தினங்களே ஆன குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்ட தனுஷ் பட ஹீரோயின்..! செம்ம கியூட் பேபி..!
தமிழில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக 'மயக்கம் என்ன' படத்திலும், நடிகர் சிம்புவுக்கு ஜோடியாக 'ஒஸ்தி' படத்திலும் நடித்து பிரபலமானவர் தெலுங்கு நடிகை ரிச்சா கங்கோபாத்யாய கர்ப்பமாக இருந்த நிலையில், கடந்த மாதம் 27 ஆம் தேதி இவருக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது. தற்போது பிறந்து சில தினங்களே ஆன குழந்தையின் புகைப்படத்தை இவர் வெளியிட்டுள்ளார்.
நடிகை ரிச்சா கங்கோபாத்யாய 'மயக்கம் என்ன' படத்திற்காக, சிறந்த நடிகைக்கான பிலிம் பேர் விருது, SIIMA விருது, எடிசன் விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்று பிரபலமானவர்.
தமிழ் திரையுலகில் இவரை பற்றி ஒரு சில வதந்திகள், கிசு கிசுவாக பரவியதால், இனி தமிழ் படங்களிலேயே நடிக்க கூடாது என முடிவெடுத்ததாக கூறப்பட்டது.
இவர் கடைசியாக கடந்த 2013 ஆம் ஆண்டு 'பாய்' என்கிற தெலுங்கு படத்தில் நடித்தார். இதை தொடர்ந்து, MBA படிப்பதற்காக, அமெரிக்காவிற்கு சென்று அங்கு தன்னுடைய படிப்பை முடித்தார்.
இதை தொடர்ந்து, இவருக்கு கிடைத்த சில படங்களின் வாய்ப்புகளையும் ஏற்கவில்லை. இந்நிலையில், தன்னுடைய நீண்ட நாள் காதலரான அமெரிக்காவைச் சேர்ந்த ஜோ லாங்கெல்லா என்பவரை, கிறிஸ்தவ முறைப்படியும், இந்துக்கள் முறைப்படியும் திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் செட்டில் ஆனார்.
இந்நிலையில் சமீபத்தில் கர்ப்பமாக இருப்பிடத்தை புகைப்படம் வெளியிட்டு தெரிவித்திருந்தார்.
இதை தொடர்ந்து இவருக்கு, மே 27 ஆம் தேதி, அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது.
பிறந்து சில தினங்களே ஆன குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்டு, குழந்தை மிகவும் ஆரோக்கியமாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.
தங்களுடைய குழந்தைக்கு ‘லூகா’ என்ற பெயரை ரிச்சா-ஜோ லங்கேலா தம்பதிகள் வைத்துள்ளனர்.
இதை தொடர்ந்து ரசிகர்கள் பலர் தொடர்ந்து தங்களுடைய வாழ்த்துக்களை ரிச்சா - ஜோ லங்கோலா தம்பதிகளுக்கு தெரிவித்து வருகிறார்கள்.