- Home
- Cinema
- 100 நாள் பிரபலமாக இருக்கலாம்... ஆனா யாரும் ஸ்டார் ஆக முடியாது - பிக்பாஸை ஓப்பனாக போட்டுத்தாக்கிய பிரபல நடிகை
100 நாள் பிரபலமாக இருக்கலாம்... ஆனா யாரும் ஸ்டார் ஆக முடியாது - பிக்பாஸை ஓப்பனாக போட்டுத்தாக்கிய பிரபல நடிகை
பிக்பாஸில் அந்த 100 நாட்களும் சூழல்களைத் தூண்டிவிட்டு ஒரு பரபரப்பை உருவாக்குவார்கள். அங்கு அடிக்கடி சண்டைகள் நடக்கும், ஆனால் வெள்ளிக்கிழமை மீண்டும் சேர்ந்து கொள்வார்கள் என நடிகை ரேகா தெரிவித்துள்ளார்.

உலகளவில் பிரபலமான ரியாலிட்டி ஷோவான பிக்பாஸ் கடந்த 2017-ம் ஆண்டு தமிழில் அறிமுகமானது. விறுவிறுப்புக்கும், பரபரப்புக்கும் பஞ்சமில்லாத இந்நிகழ்ச்சி அந்த ஆண்டே ரசிகர்களின் பேவரைட் நிகழ்ச்சியாக மாறியது. இந்நிகழ்ச்சியின் கூடுதல் சிறப்பு என்றால் அது கமல்ஹாசன் தான். அவர் தொகுத்து வழங்கும் விதம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்ததால், கடைசியாக முடிந்த 5-வது சீசன் வரை அவரே தொகுத்து வழங்கினார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில், ஆரவ்வும், இரண்டாவது சீசனில் ரித்விகாவும், மூன்றாவது சீசனில் முகினும், நான்காவது சீசனில் ஆரியும், ஐந்தாவது சீசனில் ராஜுவும் டைட்டில் வின்னர்களாகினர். தற்போது ஓடிடிக்கென பிரத்யேகமாக பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. பிக்பாஸ் அல்டிமேட் என பெயரிடப்பட்டுள்ள இந்நிகழ்ச்சி ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பப்படுகிறது.
இந்நிகழ்ச்சியில் சினேகன், சுஜா வருணி, ஜூலி, தாடி பாலாஜி, ஷாரிக், அபிராமி, வனிதா, அனிதா, சுரேஷ் சக்ரவர்த்தி, பாலாஜி முருகதாஸ், சுருதி, நிரூப், தாமரைச் செல்வி, அபிநய் ஆகிய 14 போட்டியாளர்கள் களமிறங்கினர். இதில் முதல் வார இறுதியில் குறைந்த வாக்குகள் பெற்ற காரணத்தினால் சுரேஷ் சக்ரவர்த்தி வெளியேற்றப்பட்டார்.
இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்ட நடிகை ரேகா, சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது பிக்பாஸ் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார். அதில் அவர் கூறியதாவது: “பிக்பாஸில் நடப்பது உண்மையா இல்லை பொய்யா என்பதை தெரிந்து கொள்ளலாம் என்று ஒரு 15 நாள் அங்கு போய்விட்டு வந்தேன்.
பிக்பாஸில் அந்த 100 நாட்களும் சூழல்களைத் தூண்டிவிட்டு ஒரு பரபரப்பை உருவாக்குவார்கள். அங்கு அடிக்கடி சண்டைகள் நடக்கும், ஆனால் வெள்ளிக்கிழமை மீண்டும் சேர்ந்து கொள்வார்கள். பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் 100 நாட்கள் தான் பிரபலமாக இருக்கமுடியும். இதன்மூலம் யாரும் ஸ்டார் ஆக முடியாது. ஆனால் வாழ்க்கையில் நிறைய விஷயங்களை கற்றுக் கொள்ளலாம்” என தெரிவித்துள்ளார்.