- Home
- Cinema
- Actress Regina : உதட்ட புடிச்சி இழுத்தாங்க... அட்ஜஸ்மென்ட் பண்ண சொன்னாங்க - கசப்பான அனுபவங்களை பகிர்ந்த ரெஜினா
Actress Regina : உதட்ட புடிச்சி இழுத்தாங்க... அட்ஜஸ்மென்ட் பண்ண சொன்னாங்க - கசப்பான அனுபவங்களை பகிர்ந்த ரெஜினா
தமிழ், தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளில் நடித்து பிரபலமான நடிகை ரெஜினா, திரைத்துறையில் நடக்கும் அத்துமீறல்கள் குறித்து வெளிப்படையாக பேசி உள்ளார்.

இயக்குனர் மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக பணியாற்றிய பிரியா, இயக்குனராக அவதாரம் எடுத்த ‘கண்ட நாள் முதல்’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ரெஜினா கசண்ட்ரா (Regina cassandra). இதையடுத்து தமிழில் கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தில் நடித்தார். இப்படம் ஹிட் ஆன போதும் ரெஜினாவுக்கு பட வாய்ப்புகள் சரிவர கிடைக்காததால், டோலிவுட் பக்கம் சென்றார். அங்கு முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக அடுத்தடுத்து பல படங்களில் நடித்தார்.
சமீப காலமாக ரெஜினாவின் கதைத் தேர்வு அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது. கதாநாயகியாக தான் நடிப்பேன் என்று அடம்பிடிக்காமல், வில்லி வேடங்களிலும் தைரியமாக நடித்து அசத்துகிறார். சமீபத்தில் விஷால் (Vishal) நடிப்பில் வெளியான சக்ரா படத்தில் வில்லியாக நடித்திருந்தார். அடுத்ததாக அருண்விஜய்யின் பார்டர் (Border) படத்திலும் எதிர்மறை கதாபாத்திரம் ஏற்று நடித்துள்ளார்.
இந்நிலையில் திரைத்துறையில் நடக்கும் அத்துமீறல்கள் குறித்து நடிகை ரெஜினா (regina), பேட்டி ஒன்றில் வெளிப்படையாக பேசியுள்ளார். அதில் அவர் கூறியதாவது: திரைத்துறைக்கு வந்த புதிதில் ஒருவர் எனக்கு போன் செய்து அட்ஜெஸ்மெண்ட் பண்ணுவீங்களானு கேட்டார். அப்போ எனக்கு 20 வயசு இருக்கும். நான் மேனேஜர் தான் பேசுவாங்கன்னு அவர்கிட்ட சொல்லிட்டே இருந்தேன்.
அதன் பின்னர் அவர் திரும்ப திரும்ப கேட்கும் போதுதான், அவர் வேறு கோணத்தில் கேட்கிறார் என்பது எனக்கு புரிந்தது. உடனே நான் இணைப்பை துண்டித்து விட்டேன். அதற்கு பின் எனக்கு இந்த மாதிரியான அனுபவங்கள் எதுவும் நடக்கவில்லை. ஆனால் நான் நிச்சயமா சொல்லுவேன். பெண்கள் இதை எதிர்கொண்டுதான் இருக்கிறார்கள். அதில் சில சம்பவங்கள் உண்மையாகவும் இருக்கும், சிலவை பொய்யாகவும் இருக்கும்.
ஏனெனில் நிறைய பேர் sympathy-யை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக பொய் கதையும் சொல்லுவார்கள். இது திரைத்துறைல மட்டும்தான் இருக்குனு இல்லை. எல்லா இடத்துலயும் இருக்கும். சூப்பர் மார்க்கெட் போனாக் கூட அங்கே வேலை பார்க்குற பெண்களும் இதே மாதிரியான கதைகளை சொல்வார்கள்.
நான் கல்லூரியில் படிக்கும் போது, சென்னையில் உள்ள ஈகா தியேட்டர் போற வழியில ஒரு நாள் யாரோ ஒரு நபர் திடீரென வந்து என் உதட்டை பிடிச்சி இழுந்துட்டு சாதாரணமாக கடந்து போனார். இப்படியான உலகத்துல தான் நாம வாழ்ந்துட்டு இருக்கோம்” என நடிகை ரெஜினா (Regina) அந்த பேட்டியில் ஓப்பனாக பேசியுள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.