- Home
- Cinema
- Ramya Pandian : டிரெஸ்ஸே போடாமல் போட்டோஷூட் நடத்தி டிரெண்டிங் ஆன ரம்யா பாண்டியன் - வைரலாகும் கிளாமர் கிளிக்ஸ்
Ramya Pandian : டிரெஸ்ஸே போடாமல் போட்டோஷூட் நடத்தி டிரெண்டிங் ஆன ரம்யா பாண்டியன் - வைரலாகும் கிளாமர் கிளிக்ஸ்
ஆடையின்றி கையில் ஒத்த ரோசாவை வைத்துக் கொண்டு நடிகை ரம்யா பாண்டியன் நடத்தியுள்ள லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

இன்ஜினியரிங் பட்டதாரியான நடிகை ரம்யா பாண்டியன், நடிப்பின் மீது கொண்ட ஆர்வத்தால் சினிமாவில் நடிக்கத் தொடங்கினார். இவர் முதன்முதலில் பாலாஜி சக்திவேல் இயக்க இருந்த ரா ரா ராஜசேகர் என்கிற திரைப்படத்தில் தான் நடிக்க கமிட் ஆகி இருந்தார். அப்படம் டிராப் ஆனதால், கடந்த 2015-ம் ஆண்டு வெளிவந்த டம்மி டப்பாசு என்கிற சிறு பட்ஜெட் படம் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக எண்ட்ரி கொடுத்தார் ரம்யா பாண்டியன்.
இதையடுத்து ராஜு முருகன் இயக்கத்தில் வெளியான ஜோக்கர் என்கிற திரைப்படத்தில் மல்லி என்கிற கிராமத்து பெண் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி இருந்தார். இப்படம் தேசிய விருதையும் வென்று அசத்தியது. இதையடுத்து ஆண் தேவதை, இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும் போன்ற வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களில் நடித்திருந்தாலும், நடிகை ரம்யா பாண்டியனை பேமஸ் ஆக்கியது அவரது மொட்டைமாடி போட்டோஷூட் தான்.
இதையும் படியுங்கள்... படப்பிடிப்பின் போது ஏற்பட்ட சண்டை... தனுஷின் கன்னத்தில் ஓங்கி அறைவிட்ட பிரபல இயக்குனர் - ஷாக்கிங் சம்பவம்
சேலையில் இடுப்பழகை காட்டி மொட்டை மாடியில் இவர் நடத்திய கவர்ச்சி போட்டோஷூட் ரம்யா பாண்டியனை மிகப்பெரிய அளவில் பிரபலம் ஆக்கியது. இதையடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் வாய்ப்பும் கிடைத்தது. இதுதவிர குக் வித் கோமாளி என்கிற சமையல் நிகழ்ச்சியில் பங்கேற்று பைனல் வரை சென்று அசத்தினார் ரம்யா பாண்டியன். சமீபத்தில் மலையாள நடிகர் மம்முட்டி உடன் இவர் நடித்திருந்த நண்பகல் நேரத்து மயக்கம் என்கிற மலையாள படம் விமர்சன ரீதியாக வெற்றிபெற்றது.
சினிமாவில் தொடர்ந்து கிராமத்து பெண்ணாக கலக்கி வந்த ரம்யா பாண்டியன், தற்போது மீண்டும் கவர்ச்சி ரூட்டுக்கு திரும்பி இருக்கிறார். டிரெஸ்ஸே போடாமல் கையில் ஒத்த ரோசா உடன் நடிகை ரம்யா பாண்டியன் நடத்தி இருக்கும் லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படங்கள் சோசியல் மீடியாவை ஆக்கிரமித்து உள்ளன. ரம்யா பாண்டியனின் இந்த வித்தியாசமான போட்டோஷூட் புகைப்படங்களுக்கு இன்ஸ்டாகிராமில் லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளன.
இதையும் படியுங்கள்... Oscar 2023 : என்னது ஆஸ்கார் விருதை பிளாஸ்டிக்கால் செய்தார்களா? - பலரும் அறிந்திடாத 5 டக்கரான தகவல்கள் இதோ
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.