- Home
- Cinema
- Ramya Pandian: கருப்பு நிற படு கிளாமர் உடையில்... 'பில்லா' நயன்தாராவுக்கே டஃப் கொடுக்கும் ரம்யா பாண்டியன்!
Ramya Pandian: கருப்பு நிற படு கிளாமர் உடையில்... 'பில்லா' நயன்தாராவுக்கே டஃப் கொடுக்கும் ரம்யா பாண்டியன்!
நடிகை ரம்யா பாண்டியன் (Ramya Pandian) பில்லா நயன்தாராவை (Billa Nayanthara) போல் கருப்பு நிற ஹாட் உடையில்... காரின் பக்கத்தில் நின்றும், காரின் மேல் அமர்ந்தும் வெளியிட்டுள்ள போட்டோஸ் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

கண்டமேனிக்கு படங்களை தேர்வு செய்து நடிப்பதை விட, வருடத்திற்கு ஒரு படத்தில் நடித்தாலும்... அது ரசிகர்கள் மனதில் இடம்பிடிக்கும் கதாபாத்திரமாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளார் ரம்யா பாண்டியன்.
குறிப்பாக பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர், இவர் தேர்வு செய்யும் கதைகளும் மிகவும் வித்தியாசமாகவே உள்ளது. அந்த வகையில்... சூர்யா தயாரிப்பில் ரம்யா பாண்டியன் நடிப்பில் வெளியான 'ராமே ஆண்டாளும் ராவன ஆண்டாளும்' படத்தில் இவரது கதாபாத்திரத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
இதை தொடர்ந்து தற்போது தமிழில், 'இடும்பன்காரி' என்கிற படத்திலும், மலையாளத்தில் சூப்பர் ஸ்டார் மாமூட்டி நடித்து வரும் 'நண்பகல் நேரத்து மயக்கம்' என்கிற படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
மேலும் தொடர்ந்து பட வாய்ப்புகளை பிடிப்பதற்காக... விதவிதமான போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வரும் ரம்யா பாண்டியன் தற்போது செம்ம ஸ்டைலிஷாக வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களை அதிகம் கவர்ந்துள்ளது.
கருப்பு நிற டைட் உடையில்... தாராள கவர்ச்சியில் 'பில்லா' படத்தில் வரும் நடிகை நயன்தாராவுக்கு நிகராக போஸ் கொடுத்து அசத்தியுள்ளார்.
அதிலும் BMW கார் மேல் குத்த வைத்து அமர்ந்து, ரம்யா பாண்டியன் கொடுத்துள்ள போஸ் உண்மையிலேயே வேற லெவலில் உள்ளது. இந்த புகைப்படத்தில் செம்ம ஸ்டைலிஷாக உள்ளார் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.