- Home
- Cinema
- Raiza Wilson Photos : கிழிஞ்ச டவுசர் போட்டு.... கிளுகிளுப்பாக போஸ் கொடுத்த ரைசா! கிக் ஏற்றும் கிளாமர் கிளிக்ஸ்
Raiza Wilson Photos : கிழிஞ்ச டவுசர் போட்டு.... கிளுகிளுப்பாக போஸ் கொடுத்த ரைசா! கிக் ஏற்றும் கிளாமர் கிளிக்ஸ்
பிசியான நடிகையாக வலம் வரும் ரைசா, அவ்வப்போது கவர்ச்சியாக போட்டோஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

மாடல் அழகியான ரைசா வில்சன், தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டதன் மூலம் தமிழக மக்களின் கவனம் ஈர்த்தவர்.
தனுஷின் வேலையில்லா பட்டதாரி 2 படத்தில் குணச்சித்திர வேடத்தில் நடித்திருந்த ரைசா, இளன் இயக்கத்தில் வெளியான பியார் பிரேமா காதல் படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.
இப்படத்தில் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக ரைசா நடித்திருந்தார். இதையடுத்து பாலா இயக்கத்தில் உருவான வர்மா படத்தில் கிளாமர் ரோலில் நடித்து அதிர்ச்சி கொடுத்தார்.
அண்மையில் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான எஃப்.ஐ.ஆர் படத்தில் துணிச்சலான பெண் போலீஸ் அதிகாரியாக நடித்து அசத்தி இருந்தார். அவரது நடிப்புக்கு பாராட்டுக்களும் கிடைத்தன.
தற்போது இவர் கைவசம் ஜி.வி.பிரகாஷின் "காதலிக்க நேரமில்லை" படம் உள்ளது. இதுதவிர இசையமைப்பாளர் யுவன் சங்கர்ராஜா தயாரிப்பில் உருவாகும் "ஆலிஸ்" என்ற படத்திலும் நடித்துள்ளார்.
மேலும் இயக்குனர் கார்த்திக் ராஜு இயக்கத்தில் உருவாகி உள்ள தி சேஸ் என்கிற படத்திலும் நடித்து முடித்துள்ளார் ரைசா. கதாநாயகியை மையமாகக் கொண்டு உருவாகி இருக்கும் இப்படத்தில் நடிகை ரைசா லீட் ரோலில் நடித்திருக்கிறார்.
பிசியான நடிகையாக வலம் வரும் ரைசா, அவ்வப்போது கவர்ச்சியாக போட்டோஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.
அந்த வகையில் தற்போது கிழிஞ்ச குட்டை டவுசர் அணிந்து கிளுகிளுப்பாக போஸ் கொடுத்தபடி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.