- Home
- Cinema
- Priya Bhavani shankar : உள்ளாடை சைஸ் என்ன... அத்துமீறிய நெட்டிசனுக்கு தரமான பதிலடி கொடுத்த பிரியா பவானி சங்கர்
Priya Bhavani shankar : உள்ளாடை சைஸ் என்ன... அத்துமீறிய நெட்டிசனுக்கு தரமான பதிலடி கொடுத்த பிரியா பவானி சங்கர்
Priya Bhavani shankar : நேற்று இன்ஸ்டாகிராம் வாயிலாக ரசிகர்களுடன் கலந்துரையாடிய பிரியா பவானி சங்கர், அப்போது ரசிகர்கள் கேட்ட ஏராளமான கேள்விகளுக்கு பதிலளித்தார்.

செய்தி வாசிப்பாளராக அறிமுகமாகி, பின்னர் சின்னத்திரையில் சீரியல் நடிகையாக அறிமுகமாகி தற்போது வெள்ளித்திரையில் பிசியான நடிகையாக வலம் வருகிறார் பிரியா பவானி சங்கர். இதுவரை இவர் நடித்த படங்கள் அனைத்தும், போட்ட முதலுக்கு மோசமின்றி வசூல் செய்துள்ளதால் கோலிவுட்டின் ராசியான நாயகி என்கிற அடையாளத்தோடும் பார்க்கப்பட்டு வருகிறார்.
தமிழில் இவர் கைவசம் ராகவா லாரன்ஸின் ருத்ரன், தனுஷுடன் திருச்சிற்றம்பலம், எஸ்.ஜே.சூர்யாவுக்கு ஜோடியாக பொம்மை, ஷங்கர் இயக்கும் இந்தியன் 2, சிம்புவின் பத்து தல, அருண் விஜய்யுடன் யானை உள்பட ஏராளமான படங்களில் நடித்து வருகிறார். இதுதவிர தெலுங்கில் விக்ரம் குமார் இயக்கும் வெப் தொடர் ஒன்றில் நாகசைதன்யாவுக்கு ஜோடியாக நடிக்கிறார்.
இவ்வாறு பிசியான நடிகையாக வலம் வரும் பிரியா பவானி சங்கர், நேற்று இன்ஸ்டாகிராம் வாயிலாக ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அப்போது ரசிகர்கள் கேட்ட ஏராளமான கேள்விகளுக்கு பதிலளித்தார். வழக்கமாக இதுபோன்ற சூழல்களில் நடிகைகளை கடுப்பேற்றும் படியான கேள்விகளை சிலர் கேட்பதுண்டு. அந்த வகையில் நெட்டிசன் ஒருவன், உங்களது உள்ளாடை சைஸ் என்ன என கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த பிரியா, “மார்பகங்களை நான் வேற்று கிரகத்தில் இருந்து வாங்கி வரவில்லை. உங்கள் வாழ்க்கையில் உள்ள பெண்களுக்கு அது உள்ளது” எனக்கூறி தரமான பதிலடி கொடுத்துள்ளார். நடிகை பிரியா பவானி சங்கரின் இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இதையும் படியுங்கள்... Beast Box Office : வலிமை படத்தின் முதல் நாள் வசூலை அடிச்சுதூக்கி டாப் டக்கர் சாதனை படைத்த பீஸ்ட்
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.