- Home
- Cinema
- Actress Poorna Engagement : நடிப்புக்கு டாட்டா சொன்ன பூர்ணா.. திடீர் முடிவால் ஷாக்கான ரசிகர்கள்!
Actress Poorna Engagement : நடிப்புக்கு டாட்டா சொன்ன பூர்ணா.. திடீர் முடிவால் ஷாக்கான ரசிகர்கள்!
actress poorna engaged with UAE based businessman : சவரக்கத்தி படம் மூலம் புகழ்பெற்ற நடிகை பூர்ணாவுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளதை அடுத்து நண்பர்கள் திரைபிரபலங்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

poorna
ஷாம்னா காசிம் என்னும் இயற் பெயரை கொண்ட பூர்ணா நடனக் கலைஞர் மற்றும் மாடலாக அறிமுகமானவர்.. 2004 ஆம் ஆண்டு மலையாளத் திரைப்படமான மஞ்சு பொளொரு பெண்குட்டியில் நடிகையாக என்ட்ரி கொடுத்து 60க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
poorna
தமிழில் ‘முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு’ திரைப்படம் மூலம் அறிமுகமான பூர்ணா. அதே ஆண்டு கொடைக்கானல், கந்தக்கோட்டை உள்ளிட்ட படங்களில் நடித்தார். தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் நடித்து தென்னிந்திய நடிகையாக மாறிய இவர் . தலைவி மற்றும் த்ரிஷ்யம் 2 போன்ற படங்களிலும், வெப் சீரிஸ்களிலும் நடித்துள்ளார்.
poorna
33 வயதான இவர் தற்போது திருமணத்திற்கு தயாராகியுள்ளார். ஐக்கிய அரபு எமிரேட்ஸைச் சேர்ந்த தொழிலதிபர் ஷானித் ஆசிப் அலியுடன் பூர்ணா நிச்சயதார்த்தம் செய்யப்பட்டுள்ளது.. இதுதொடர்பாக அவர் இன்ஸ்டாகிராமில், ‘குடும்பத்தின் ஆசீர்வாதத்துடன், நான் எனது அடுத்த வாழ்க்கைப் பகுதிக்கு அடியெடுத்து வைக்கிறேன். இப்போது அது அதிகாரப்பூர்வமானது” எனப் பதிவிட்டுள்ளார்.
Poorna
நிச்சயதார்த்த விழாவில் இருந்து சில படங்களை வெளியிட்டுள்ள பூர்ணாவிற்கு அவரது திரையுலக நண்பர்களும், ரசிகர்களும் வாழ்த்துச் செய்திகளை அனுப்பு வருகின்றனர். அதன்படி நடிகை பிரியாமணி, நடிகர் பாரிஸ் லக்ஷ்மி உள்ளிட்டோர் வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.