Nandita swetha: ரெய்ன்ல கூட கிளாமர் குறையாமல் போஸ் கொடுத்த குமுதா!! கிராப் டாப்பில் கையை தூக்கி படு ஹாட் போஸ்!
நடிகை நந்திதா (Nandita Swetha), அடைமழையிலும் சற்றும் கிளாமர் குறையாமல் கிராப் டாப்பில் கையை உயர்த்தி வெளியிட்டுள்ள படு ஹாட் புகைப்படத்திற்கு காமெண்ட்ஸை தெறிக்கவிட்டு வருகிறார்கள் ரசிகர்கள்.
இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கிய "அட்டகத்தி" திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை நந்திதா ஸ்வேதா.
அதன் பின்னர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக இவர் நடித்த, "இதற்குத்தானோ ஆசைப்பட்டாய் பாலகுமாரா" படம் சூப்பர் ஹிட்டானது. அதில் 'குமுதா' என்ற கதாபாத்திரத்தில் கச்சிதமாக நடித்திருந்தார்.
பக்கத்து வீட்டு பெண் போன்ற நந்திதாவின் முகம், தமிழக ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. 'எதிர் நீச்சல்', 'முண்டாசுப்பட்டி' போன்ற படங்களில் நிஜ கிராமத்து பெண்களே தோற்கும் அளவிற்கு கேரக்டரோடு பொருந்தி நடித்திருந்தார்.
இதனையடுத்து விஜய்யின் 'புலி' படத்தில் கூட சிறிய கதாபாத்திரத்தில் வந்து போனார். அதன் பின்னர் தன்னால் இப்படியும் நடிக்க முடியும் என்பதை காட்டும் விதமா ஐபிசி 376 படத்தில் காக்கிச் சட்டை அணிந்து கெத்தான போலீஸ் அதிகாரியாக நடித்தார்.
என்ன தான் திறமை இருந்தாலும் துளியும் கவர்ச்சி காட்டாமல் நடித்து வந்ததால் நந்திதாவிற்கு பட வாய்ப்புகள் இல்லாமல் போனது. அதனால் ரூட்டை மாற்றிய நந்திதா விதவிதமான ஹாட் போட்டோ ஷூட்களை நடத்தி வருகிறார்.
ஹோம்லி லுக்கில் வலம் வந்த நந்திதா இப்போது பட வாய்ப்புகளை பிடிப்பதற்காக அநியாயத்திற்கு கவர்ச்சி காட்டி வருகிறார்.
மேலும் முன்பு இருந்ததை விட உடல் எடையை ஏற்றி சும்மா கும்முனு மாறியுள்ளார் குமுதா தற்போது கிராப் டாப் அணிந்து ஒய்யாரமாக கையை தூக்கி ஹாட் போஸ் கொடுத்துள்ளார்.
இதை பார்த்து நெட்டிசன்கள் தாறுமாறாக காமெண்ட்ஸை தட்டி விட்டு வருகிறார்கள், இந்த குமுதா இதெல்லாம் என ஒரு பக்கம் பதற்றத்துடன் கேட்டால் இன்னொரு புறம், இவரை ஹாட் குயின் என புகழ்ந்து வருகிறார்கள் சில ரசிகர்கள்.
எப்படியோ இந்த ரெயின்னிலும் சூடேற்றும் கவர்ச்சியில் சும்மா... சிக்குன்னு போஸ் கொடுத்து, ஹார்ட் பீட்டை எகிற வைத்துள்ளார் நந்திதா.